கம்பராமாயணம் 7347 · யுத்த 15.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆயவன் உரைத்தலோடும் - அந்த மாலியவான் அவ்வாறு சொன்ன உடனே; அப்புறத்து இருந்தான் - அப்புறத்திலே இருந்தானாகிய; ஆன்ற மாயைகள் பலவும் வல்ல மகோதரன் - மிக்க மாயைத் தொழில்கள் பலவற்றிலும் வல்லவனாகிய மகோதரன்; கடிதின் வந்து - விரைவாக வந்து; தீ எழ நோக்கி - தீ எழுமாறு சினந்து மாலியவானைப் பார்த்து; என் இச்சிறுமை நீ செப்பிற்று என்னா - நீ இப்படி நம் தலைவனைப் பார்த்துச் சிறுமையாகச் சொல்லியது என்னே என அதட்டிக் கேட்டு; ஓய்வுறு சிந்தையானுக்கு - தோல்வியால் துவண்டுள்ள மனத்தை உடைய இராவணனுக்கு; உறாத பேர் உறுதி சொன்னான் - நன்மை தராத பெரிய உறுதி மொழிகளைச் சொன்னான்.
உற்ற பேர் உறுதி சொல்லிய மாலியவானும் உறாத பேர் உறுதி சொன்ன மகோதரனும் இராவணனின் மனத்தை மாற்ற முயன்றனர் ஆனால் தன் மனதறிந்து சொல்லுவான் சொல்லையே ஏற்கும் இராவணன் மாலியவான் சொல்லை ஏற்காது மகோதரன் சொல்லை ஏற்றான். இது கருதியே நாட்டுப் புற வழக்கில் "இராவணனுக்கு மகோதரன் தோணியது போல" என்ற பழமொழி வழக்கில் உள்ளது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As he finished speaking, the one who sat on the other side, deep
- in many kinds of sorcery, Makōtaraṉ, came forward quickly,
- glared with fire in his eyes, and saying, 'Why have you spoken this pettiness?'
- gave the weary-hearted king a great assurance that would bring him no good.
What the poem says
Makōtaraṉ, a demon skilled in magic and a flatterer, now breaks in. Glaring at Māliyavāṉ, he rebukes him for speaking so meanly to their king and then pours out bold reassurances to the dejected Irāvaṇaṉ, reassurances that will only lead him to ruin.
The commentary notes that Irāvaṇaṉ always accepts the advice that matches his own wishes; a folk proverb speaks of something being 'like Makōtaraṉ turning up for Irāvaṇaṉ'.