கம்பராமாயணம் 7349 · யுத்த 15.36

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘திரிபுரம் எரிய, ஆங்கு ஓர்தனிச் சரம் துரந்த செல்வன்,
ஒருவன் இப்புவனம் மூன்றும்ஓர் அடி ஒடுக்கிக் கொண்டோன்,
பொருது உனக்கு உடைந்துபோனார்; மானுடர் பொருத போர்க்கு
வெருவுதி போலும்; மானக்கயிலையை வெருவல் கண்டாய்!

பொருள் · Meaning in Tamil

மன்ன - மன்னனே; கயிலையை வெருவல் கண்டாய் - கயிலை மலையை அஞ்ச அசைத்தவனே; திரிபுரம் எரிய - முப்புரங்களும் எரியும்படி; ஆங்கு ஓர் - அங்கே ஒப்பற்ற; தனிச்சரம் - சிறப்பான அம்பைச்; துரந்த செல்வன் - செலுத்திய சிவபிரானும்; ஒருவன் - தான் ஒருவனே; இப்புவனம் மூன்றும் - இந்த உலகங்கள் மூன்றையும்; ஓர்அடி ஒடுக்கிக் கொண்டோன் - ஓரடியிலே அடக்கிக் கொண்ட திருமாலும்; பொருது உனக்கு உடைந்து போனார் - போர் செய்து உனக்குத் தோற்றுப் போனார்கள்; மானிடர் பொருத போர்க்கு வெருவுதி போலும் - அப்படி இருக்க மனிதர் புரியும் போருக்கு நீ அஞ்சுகிறாய் போலும் என்றான்.

கயிலையை அசைத்துச் சிவனையும் திருமாலையும் வென்ற இராவணனின் பழைய வெற்றிகளை நினைவூட்டி அண்மையில் ஏற்பட்ட தோல்வியை மறக்கச் செய்ய முயல்கிறான் மகோதரன். மானிடர் போருக்கு அஞ்சுகிறாய் போலும் என இராவணனின் மான உணர்ச்சியைத் தூண்டித் தோல்வியை மறக்கச் செய்ய முயல்கிறான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The lord who loosed a single arrow so that the triple city burned,
  2. and the one who folded these three worlds under a single step,
  3. fought you and fled in defeat; and are you afraid, it seems, of the war that men wage —
  4. you, O king, who made Kayilai itself tremble?'

What the poem says

Makōtaraṉ reminds Irāvaṇaṉ of his old triumphs: he defeated Śiva, who burned the three cities with one arrow, and Viṣṇu, who covered the three worlds in his strides, and he shook Mount Kailāsa. How can such a king fear a war waged by mere humans? He is deliberately stinging Irāvaṇaṉ's pride to make him forget his defeat.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘tiripuram eriya, āṅku ōr taṉic caram turanta celvaṉ,
oruvaṉ ip puvaṉam mūṉṟum ōr aṭi oṭukkik koṇṭōṉ,
porutu uṉakku uṭaintu pōṉār; māṉuṭar poruta pōrkku
veruvuti pōlum; maṉṉa! kayilaiyai veruval kaṇṭāy!