கம்பராமாயணம் 7352 · யுத்த 15.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இனி இறை தாழ்த்தி ஆயின் - இனி நொடிப் பொழுதேனும் நீ போர் செய்யாது தாமதித்தால்; இலங்கையும் - இலங்கை மாநகரமும்; யாமும் எல்லாம் - அரக்கர்களாகிய நாமும் பிறவும்; கனியுடை மரங்கள் ஆக - பழங்களைக் கொண்ட மரங்கள் போல் ஆகுமாறு; கவிக்குலம் கடக்கும் - வானரர் கூட்டம் வென்று விடும்; காண்டி - இதனைக் காண்; பனியுடை வேலைச் சில்நீர் - குளிர்ச்சி பொருந்திய கடலில் உள்ள மிகுதியான நீரில் சிறிதளவு நீரைப், பருகினன் பருதி - சூரியன் பருகினான்; என்னத் - என்பதற்காகத்; துனி உழந்து - மனவெறுப்புக் கொண்டு; அயர்வது என்னே - வருந்துவது எதற்காக? துறத்தியால் துன்பம் என்றான் - துன்பத்தை விட்டு விடுவாய் என்றான் மகோதரன்.
கடல்நீர் முழுவதையும் பருதி பருக முடியாதது போல இராவணனது பெரும்படை முழுவதையும் சீரை சுற்றிய இருவர் அழிக்க முடியாது என்ற குறிப்பும் காண்க. இறை - நொடிப் பொழுது. மன்னோ ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If you now delay even a moment, Ilaṅkai and we and all of us
- will be like trees laden with fruit, and the tribe of monkeys will overrun us — see it;
- just because "the sun has drunk a little water from the cold sea,"
- why suffer in grief and lose heart? Cast off your sorrow,' he said.
What the poem says
Makōtaraṉ urges Irāvaṇaṉ not to delay. If he waits, the monkeys will swarm over Ilaṅkai and its people as monkeys strip a tree of fruit. One lost battle is like the sun drinking a few drops of the ocean: the sea is not emptied, and the two hermits cannot destroy his vast army. So why grieve?