கம்பராமாயணம் 7363 · யுத்த 15.50
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கண்துயில் எழுப்ப எண்ணி - கொற்றமாக்கோயில் புக்க பத்து நூற்றுச் சீரியவீரர் கும்பகருணனைத் துயில் எழுப்பக் கருதிச் சென்று; திண்திறல் வீரன் - வலிமை மிக்க கும்பகருணனது; வாயில் திறத்தலும் - அரண்மனை வாயிலைத் திறந்தவுடன்; சுவாசவாதம் - மூச்சுக்காற்றானது; மண்டுற - மிகுதியாக வீசியதால் அதன் வேகத்திலிருந்து தப்பித் துயிலெழுப்புவதற்காக; வீரர் எல்லாம் வருவது போவதாக - அவ்வீரர்கள் தாங்கள் அலைக்கழிக்கப் படுவதைக் கண்டு; கொண்டுறு தடக்கை பற்றி - வலிமை கொண்டுள்ள தங்கள் கைகளை ஒருவருக்கொருவர் பிடித்துக் கொண்டு; குலமுடை வலியினாலே - ஒன்றாகத் திரண்ட தங்கள் வலிமையால், கடிது ஒருவாயில் புக்கார் - விரைவாக வேறொரு வாயில் வழியாக புகுந்தார்கள்.
ஒரு வாயில் என்றது - பக்க வாயில் ஆகும். நேராக உள்ள வாயிலிற் புகுந்து மூச்சுக்காற்றால் தாக்கப்பட்டவர் பக்கவாயிலிற் புகுந்து எழுப்பலாயினர் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As soon as they opened the mighty hero's door, the gale of his breath
- rushed out, so that all the warriors were swept to and fro;
- gripping one another by their strong hands, by the strength of their whole band,
- thinking to rouse him from sleep, they quickly went in by another door.
What the poem says
When the warriors open the main door, the blast of Kumpakaruṇaṉ's sleeping breath blows them back and forth. Holding hands to keep from being swept away, they go round and enter by a side door instead.