கம்பராமாயணம் 7363a · யுத்த 15.50a
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொறிகொள் கண்ணார் - தீப்பொறி வெளிப்படும் கண்ணையுடைய அவ்வீரர்கள்; ஓதநீர் விரிந்த தென்ன உறங்குவான் - கடல்நீரின் விரிந்த பரப்பு உறங்குவது போல் உறங்குகின்றவனான கும்பகருணனது; நாசிக் காற்றால் - மூச்சுக் காற்றினது வேகத்தால்; கோது இலா மலைகள் கூடி - குற்றம் இல்லாத மலைக்கூட்டங்கள் ஒன்று சேர்ந்து; வருவது போவதாக - வந்து செல்வதாக; ஈதுஎலாம் கண்ட வீரர் - இத்தன்மையைக் கண்ட வீரர்கள்; ஏங்கினர் - என்ன செய்வது என்று தெரியாது ஏக்கங்கொண்டு; துணுக்கமுற்றார் - மனநடுக்கங்கொண்டார்கள்; போதுவான் அருகு செல்லப் பயந்தனர் - அக்கும்பகருணனது அருகில் செல்ல அஞ்சினார்கள்.
மூச்சுக்காற்றின் நேர் வாயிலை இவர்கள் திறந்துவிட்டு மூடாமல் ஓடி வந்துவிட்ட படியால் அவ்வழியே மலைகள் கூடி வருவது போவதாயின. அக்காட்சியைப் பக்கவாயில் திறந்து உள்ளே நின்ற அவர்கள் கண்டு பயந்தனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As he slept, vast as the spreading waters of the sea, by the wind from his nostrils
- flawless mountains were gathered and swept in and out;
- seeing all this, the warriors groaned and trembled;
- they were afraid to go near the sleeper, those warriors with fiery eyes.
What the poem says
Through the main door they left open, Kumpakaruṇaṉ's breath now sucks whole mountains in and blows them out again. Watching from the side door, the warriors are terrified to go anywhere near him. Kumpakaruṇaṉ, sleeping, is compared to the vast spread of the ocean.