கம்பராமாயணம் 7364 · யுத்த 15.51
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
துங்கவெவ்வாயும் மூக்குங்கண்டு - கும்பகருணனது வலிய வாயினையும் மூக்கினையும் கண்டு; மெய் துணுக்கமுற்றார் - உடல் நடுங்கிய அவ்வீரர்கள்; அங்கைகள் தீண்ட அஞ்சி - தங்கள் கைகளினால் அவனைத் தொட்டு எழுப்பப் பயந்து; இங்கு இவன் தன்னை - இன்று இப்போது இவனை; யாம் இன்று எழுப்பலாம் வகை ஏது என்று - வேறு வகையில் யாம் இவனை இன்று எழுப்புவது எவ்வாறு என எண்ணி; ஆழ் செவி அதனினூடு - ஆழமான காதுகளின் உள்ளே; சங்கொடு, தாரை சின்னம் - சங்கு அடிக்கும் தாரை, ஊதுகொம்பு ஆகிய கருவிகளின் மூலம், சமைவுறச் சாற்றலுற்றார் - பெருத்த பேரொலி செய்யத் தொடங்கினார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'How can we wake this one here today?' they wondered,
- and seeing his huge, fierce mouth and nose, their bodies shook;
- afraid to touch him with their hands, into his deep ears
- they began to blast conches, long trumpets and horns with all their might.
What the poem says
Afraid even to touch the giant, whose mouth and nostrils alone are fearsome, the warriors try noise instead. They put conches, trumpets and horns to his cavernous ears and blow with all their strength.