கம்பராமாயணம் 7365 · யுத்த 15.52
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கோடு இகல் தண்டு - மலையோடு மாறுபட்ட தண்டாயுதமும், கூடம் - சம்மட்டியும்; குந்தம் - ஈட்டி; வல்லோர்கள் கூடி - என்னும் இப்படைக்கலங்களைக் கையாள்வதில் பயிற்சி வலிமையுடையவர்கள் ஒருங்கு கூடித்; தாடைகள் - கும்பகருணனது கன்னத்தாடைகள்; சந்து - உடல் பொருத்துக்கள்; மார்பு - மார்பு; தலை - தலை; எனும் இவற்றில் தாக்கி - என்னும் உடலின் மெல்லிய பகுதிகளில் எல்லாம் தாக்கி; வாடிய கையர் ஆகி - துயிலெழுப்ப முடியாது கை ஓய்ந்தவர்களாய்; மன்னவற்கு உரைப்ப - இராவணனிடம் சென்று அதனைத் தெரிவிக்க; பின்னும் நீடிய பரிகள் எல்லாம் விரைவின் நிரைத்திடும் - அதற்கு அவன் இதற்கு மேல் நீண்ட குதிரைகளை எல்லாம் சீக்கிரம் வரிசையாக நிரம்பச் செலுத்துங்கள்; என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Those skilled with maces that rival mountains, with hammers and with lances gathered
- and struck him on the cheeks, the joints, the chest and the head;
- when their arms grew weary they told the king; 'Then
- line up all the tall horses, quickly,' he said.
What the poem says
Next, men skilled with maces, sledgehammers and lances beat Kumpakaruṇaṉ on his cheeks, joints, chest and head, the tender parts of the body, until their arms ache. He still does not wake. They report to Irāvaṇaṉ, who orders tall horses to be ranked and driven over him.