கம்பராமாயணம் 7369 · யுத்த 15.56

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்றலுமே அடிவணங்கி, ஈர்ஐஞ்ஞூறு இராக்கதர்கள்,
வன்தொழிலால் துயில்கின்றமன்னவன்தன் மாடு அணுகி,
நின்று இரண்டு கதுப்பும் உறநெடு முசலம் கொண்டு அடிப்ப,
பொன்றினவன் எழுந்தாற் போல்,புடை பெயர்ந்து அங்கு எழுந்திருந்தான்.

பொருள் · Meaning in Tamil

என்றலுமே - என்று இராவணன் கூறியவுடனே; அடி இறைஞ்சி - அவனது அடியை வணங்கிவிட்டு; ஈர் ஐஞ்ஞூற்று - ஆயிரம், இராக்கதர்கள் - அரக்கர்கள்; துயில்கின்ற மன்னவன் தன் மாடு அணுகி நின்று - உறங்குகின்ற கும்பகருணனது பக்கத்தில் நெருங்கி நின்று; வன்தொழிலால் - தங்களது வலிய தொழில் திறத்தால்; இரண்டு கதுப்பும் உற - இரண்டு கன்னத்திலும் பொருந்துமாறு; நெடு முசலம் கொண்டு அடிப்ப - நீண்ட உலக்கைகளைக் கொண்டு அடிக்கப்; பொன்றினவன் எழுந்தாற்போல் - இறந்தவன் எழுந்தது போல; புடை பெயர்ந்து - படுத்த இடத்தை விட்டு அசைந்து; அங்கு எழுந்திருந்தான் - அப்போது எழுந்தான்.

பொன்றினவன் எழுந்தாற்போல் - என்ற பாடல் வரி துயிலெழுப்பல் நிகழ்ச்சியோடும் தீமையின் அழிவு என்ற பாவிக நோக்கத்தோடும் கவிஞனால் அமைக்கப்பட்டுள்ள வரியாகும். மேலும் இது கவிக்கூற்று பின் வருவது காட்டும் முன்னோடியாக விளங்குவதையும் உணர்த்துகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As soon as he said this, they bowed at his feet, and twice five hundred demons
  2. came close to the lord who lay locked in heavy sleep,
  3. and standing there struck both his cheeks with long pestles;
  4. and like a dead man rising, he stirred from where he lay and got up.

What the poem says

A thousand demons go back and pound both of Kumpakaruṇaṉ's cheeks with long pestles, and at last he stirs and rises 'like a dead man getting up'. The commentary notes that the simile does double work: it describes his slow waking and also foreshadows his death in the coming battle.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟalumē aṭi iṟaiñca, īraiññūṟṟu irākkatarkaḷ,
vaṉ toḻilāl tuyilkiṉṟa maṉṉavaṉtaṉ māṭu aṇuki,
niṉṟu iraṇṭu katuppum uṟa neṭu mucalam koṇṭu aṭippa,
poṉṟiṉavaṉ eḻuntāṟpōl, puṭaipeyarntu aṅku eḻuntiruntāṉ.