கம்பராமாயணம் 7373 · யுத்த 15.60

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆறு நூறு சகடத்து அடிசிலும்
நூறு நூறு குடம் க(ள்)ளும் நுங்கினான்;
ஏறுகின்ற பசியை எழுப்பினான்;
சீறுகின்ற முகத்து இரு செங்கணான்.

பொருள் · Meaning in Tamil

சீறுகின்ற முகத்து - சினம் மிக்குத் தோன்றுகின்ற முகத்தில்; இரு செங்கணான் - அச்சினம் மேலும் மிக்குத் தோன்றுவதற்கு அமைந்த சிவந்த இரு கண்களையுடைய கும்பகருணன்; அறுநூறு சகடத்து அடிசிலும் - அறுநூறு வண்டிச் சோற்றையும்; நூறு நூறு குடங்களும் - பல நூறு குடம் கள்ளையும், நுங்கினான் - விரைந்து உண்டான்; ஏறுகின்ற பசியை எழுப்பினான் - அதனால் அவன் மிகுகின்ற பசியை மேலும் அதிகமாக எழுப்பியவன் ஆனான்.

கள்ளும்-களும்; தொக்கது. கும்பகருணன் பேருண்டி உண்பவன் என்பதை இப்பாடல் விளக்குகிறது. பேருண்டி தாமச குணச் செயல்பாடு கொண்டது. இவ்வளவு உணவும் பசியை எழுப்பிற்றே விர, பசியைத் தீர்க்கவில்லை என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Six hundred cartloads of rice
  2. and hundreds upon hundreds of jars of toddy he gulped down;
  3. he only roused his rising hunger further,
  4. he of the two red eyes in a snarling face.

What the poem says

Food is brought: six hundred cartloads of cooked rice and hundreds of jars of toddy. Kumpakaruṇaṉ swallows it all, and it only makes him hungrier. The commentary notes that such gluttony belongs to tāmasa, the quality of dullness and darkness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṟu nūṟu cakaṭattu aṭicilum
nūṟu nūṟu kuṭam kaḷum nuṅkiṉāṉ;
ēṟukiṉṟa paciyai eḻuppiṉāṉ;
cīṟukiṉṟa mukattu iru ceṅkaṇāṉ.