கம்பராமாயணம் 7374 · யுத்த 15.61
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பிறங்கு உருமை ஏற்றை - விளங்குகின்ற ஆண் இடியைப், பிசைந்து எரி ஊதுவான் - கையினால் பிசைந்து நெருப்புப் பொறியாக ஊதவல்ல வலிமையுடைய கும்பகருணன்; பெருமை ஏற்றது - பெருமை பெற்றதாகிய பேருண்டியைக்; கோடும் என்றே - உட்கொள்வோம் என்று கருதி; எருமை ஏற்றை ஓர் ஈர் அறு நூற்றையும் - எருமைக்கடாக்கள் ஆயிரத்திருநூற்றையும் அருமை இன்றியே; தின்று - வருத்தமில்லாமல் தின்று, இறை ஆறினான்-ஓரளவு பசி தணித்தான்.
மிகுதியான உணவும் மிகுதியான உறக்கமும் மிகப் பரந்த பேருடம்பும் மிகுதியான சினமும், மிகுதியான வலிமையும் உடையவன் கும்பகருணன் என அவனது பாத்திரத்தன்மையை மிகுத்துக் கூறியது காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Twice six hundred bull buffaloes
- he ate without effort, and eased his hunger a little;
- he who, meaning to take a meal worthy of his greatness, could knead
- the flashing male thunderbolt in his hands and blow it into flame.
What the poem says
Kumpakaruṇaṉ then eats twelve hundred buffalo bulls with no trouble and only then takes the edge off his hunger. He is so strong that he could knead a thunderbolt in his hands and blow it into sparks. The commentary sums up his character: enormous appetite, endless sleep, a huge body, great anger and great strength.