கம்பராமாயணம் 7381 · யுத்த 15.68

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

திக்கு அடங்கலும் வென்றவன் - திக்குகள் முழுவதையும் வென்றவனான இராவணன்; சீறிட - சினந்து சீறிடும்போது; மிக்கு அடங்கிய - அச்சீற்றத்துக்கு முன் மிகவும் அடங்கிய; வெங்கதிர் - சூரியனும்; அங்கிகள் - நெருப்பும்; புக்கு அடங்கிய - அஞ்சிப் புகுந்து பதுங்குவதற்குரிய; மேருப்புழை என - மேரு மலையில் உள்ள குகை போல் தோன்றுகிற; தொக்கு அடங்கித் - தோல் சுருங்கித், துயில் தரு கண்ணினான் - உறக்கக் குறிப்பை வெளிக்காட்டும் கண்களை உடையவன்.

தொக்கு-தோல். தொக்கடங்கி-மிகச் சுருங்கி. ஒரு பொருட்பன்மொழி. இப்பாடலில் கும்பகருணனின் கண்ணின் வருணனை கூறப்பட்டுள்ளது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the conqueror of all the directions snarled,
  2. the hot-rayed sun and the fires, shrinking low,
  3. would creep in and hide as in the caves of Mēru — like these were
  4. his eyes, sunk deep in folds of skin and heavy with sleep.

What the poem says

A description of Kumpakaruṇaṉ's eyes, still heavy with sleep and sunk deep in wrinkled skin. They are like the caves of Mount Mēru in which the sun and the fire god hide, cowering, when Irāvaṇaṉ, conqueror of all directions, roars in anger. The caves suggest both their size and the fire glowing in them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tikku aṭaṅkalum veṉṟavaṉ cīṟiṭa
mikku aṭaṅkiya veṅ katir aṅkikaḷ
pukku aṭaṅkiya mērup puḻai eṉa
tokku aṭaṅkit tuyiltaru kaṇṇiṉāṉ;