கம்பராமாயணம் 7388 · யுத்த 15.75

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மெய் எலாம் மிளிர் மின்வெயில் வீசிட
தொய்யில் வாசத் துவர் துதைந்து ஆடிய
கய்யின் நாகம் என கடல் மேனியில்
தெய்வம் நாறு செம் சாந்தம் உம் சேர்த்தினான்.

பொருள் · Meaning in Tamil

மெய் எலாம் மிளிர் மின் வெயில் வீசிட - உடம்பு எல்லாம் விளங்குகின்ற மின்னல் போல் அணிகலங்கள் ஒளிவீச; வாசத் தொய்யில் துவர் துதைந்து ஆடிய - மணமுள்ள சந்தனக் குழம்பின் செந்நிறத்தில் மிகுதியும் தோய்ந்த; கையின் நாகம் என- கை உடைய யானையைப் போல் கும்பகருணன் தோன்றுமாறு; கடல் மேனியில் - அவனது கடல் போன்ற மேனியில், தெய்வம் நாறு செஞ்சாந்தமும் சேர்த்தினான் - தெய்வத்தன்மையுடைய இயற்கை மணம் வீசுகின்ற செஞ்சந்தனக் குழம்பைப் பூசினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. While lightning-like gleams flashed over all his body,
  2. so that he looked like a trunked elephant that has bathed, steeped in red, fragrant paste,
  3. upon his sea-like body
  4. he laid red sandal paste breathing a divine fragrance.

What the poem says

Irāvaṇaṉ anoints his brother. Kumpakaruṇaṉ's dark, ocean-like body, already glittering with jewels, is smeared with fragrant red sandal paste, so that he looks like a great elephant that has wallowed in red, scented mud.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mey elām miḷir miṉ veyil vīciṭa
toyyil vācat tuvar tutaintu āṭiya
kaiyiṉ nākam eṉa kaṭal mēṉiyil
teyvam nāṟu ceñ cāntamum cērttiṉāṉ.