கம்பராமாயணம் 7389 · யுத்த 15.76
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நெடுவிண்ணினைத் தொட - நீண்ட ஆகாயத்தைத் தீண்டுதற்காக, விடம் எழுந்தது போல் உயர்ந்தவன் - நஞ்சானது எழுந்து நின்றாற் போல உயர்ந்து நின்றவனாகிய கும்பகருணனது; மார்பிடை - மார்பில்; இடபம் உந்தும் எழில் இரு நான்கு தோள் கடவுள் ஈந்த - இடபவாகனத்தைச் செலுத்தும் அழகிய எண்தோள்களையுடைய சிவபிரான் தந்த; கவசமும் சுற்றினான் கட்டினான் - கவசத்தைச் சுற்றி வந்து கட்டினான்.
சுற்றினான்-முற்றெச்சம். கும்பகருணனைச் சுற்றி வந்து இராவணன் கவசத்தைக் கட்டினான் என்க. எழில் இரு நான்கு தோள்கடவுள்-சிவபிரான், எண்தோள் முக்கண் எம்மான், இதனையே "போர்க்கோலம் செய்துவிட்டான்" என்று கும்பகருணன் கூறுவது (7420) காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like poison rising up, to the long sky
- he towered; on his chest, going round him,
- the armour that the god of twice four fair shoulders, who drives the bull,
- had given, he fastened too.
What the poem says
Irāvaṇaṉ fastens on Kumpakaruṇaṉ's chest the armour given by Śiva, the eight-armed god who rides the bull, walking around his towering brother to tie it. Kumpakaruṇaṉ, rising to the sky, is likened to the poison that surged up when the gods churned the ocean. Later Kumpakaruṇaṉ will remark that his brother has dressed him for war.