கம்பராமாயணம் 7390 · யுத்த 15.77
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மின்னின் அன்ன புருவமும் - மின்னலைப் போன்ற வடிவமும் நிறமும் உடைய புருவமும்; விண்ணினைத் துன்னுதோளும் - வானத்தை நெருங்குமளவு உயர்ந்த தோளும்; இடந்துடியா நின்றான் - இடப்பக்கத்திலேயே துடிக்கப் பெற்றவனான கும்பகருணன்; அன்ன காலையில் - அப்போது; ஆயத்தம் யாவையும் என்ன காரணத்தால் - இப்போர் ஆயத்தங்கள் செய்யப்படுவது என்ன காரணத்தால்; என்று இயம்பினான் - என்று வினவினான்.
மந்திரப்படலத்து அறிவுரை கூறிய கும்பகருணன் பின்பு உறங்கச் சென்றுவிட்டதால் நடந்த நிகழ்ச்சிகளை அறியாது இவ்வாறு வினவினான் என்க. ஆயத்தம்-போருக்குரிய ஏற்பாடுகள், துடியா செய்யா என்னும் வாய்பாட்டு உடன்பாட்டு வினையெச்சம். ஆண்களுக்கு இடப்புறத்துப் புருவமும் தோளும் துடித்தல் தீ நிமித்தம் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At that moment, 'All these preparations —
- for what reason?' he asked,
- while his lightning-bright brow and his shoulder that reached
- the sky kept throbbing on the left side.
What the poem says
Kumpakaruṇaṉ, who went back to sleep after giving his advice at the war council and knows nothing of what has happened since, asks why he is being armed. As he speaks, his left brow and left shoulder twitch: for a man, a twitch on the left side is a bad omen.