கம்பராமாயணம் 7393 · யுத்த 15.80
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
செருக்கிட்டியதோ- போர் கிட்டி விட்டதோ?; கிளர் பொன் சீதையைச் சுட்டியதோ - அப்பேர் அழகு விளங்குகின்ற சீதையைக் காரணமாகக் கொண்டதோ? திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை - கண்ணில் நஞ்சுடைய திட்டி விடம் என்ற பாம்பு போன்ற கற்புக்கரசியை; முனம் சொன்ன சொற்களால் - முன்பு நான் சொல்லிய சொற்களைக் கருதிப் பார்த்து; விட்டிலையோ - நீ விடவில்லையோ? இது விதியின் வண்ணமே - அவ்வாறு விடாமல் இருந்த இது விதியின் கொடுஞ்செயல் ஆகும்.
திட்டியின் விடம்-கண்ணில் நஞ்சுள்ள பாம்பு. முனம்-இடைக்குறை. முனம் சொன்ன சொற்கள். இராவணன் மந்திரப் படலத்தில் கும்பகருணன், வீடணன் ஆகியோர் கூறிய சொற்களை உள்ளடக்கிக் கூறியது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Has war drawn near? Is it on account of radiant, golden Cītai?
- Heeding the words I spoke before,
- did you not let go that queen of chastity, who is like the venom of the serpent that kills with a glance?
- This is the working of fate!'
What the poem says
Kumpakaruṇaṉ asks whether this war is over Cītai, and whether, despite his earlier warning, Irāvaṇaṉ has refused to release her. He likens her chastity to the poison of the ṭiṭṭi serpent, said to kill with a mere look: to hold her is fatal. That his brother did not let her go can only be the work of fate.