கம்பராமாயணம் 7394 · யுத்த 15.81

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஐயனே; உலகினைக் கல்லலாம் - உலகினைப் பெயர்த்தெடுக்கலாம்; வரம்பு கட்டவும் சொல்லலாம் - அது மட்டுமல்லாமல் அவ்வுலகம் முழுவதற்கும் வேலி கட்டவும் சொல்லலாம்; பெருவலி இராமன் தோள்களை - பெருவலிமை படைத்த இராமனது தோள் ஆற்றலை; வெல்லலாம் என்பது - வென்றுவிடலாம் என்று கருதுவது; சீதை மேனியைப் புல்லலாம் என்பது போலுமால் - சீதையின் மேனியைத் தழுவலாம் என்பது போலும்.

உலகைக் கல்லும் வலிமையுடையவர்களும் உலகுக்கு வேலி அமைக்கும் பெருவலி படைத்தோரும் இராமனை வென்று சீதை மேனியைப் புல்ல முடியாது என்று கூறியவாறு. ஆல்-அசை உலகினை என்ற சொல்லைக் கல்லலாம், வரம்பு கட்டவும் சொல்லலாம் என்ற ஈரிடத்தும் இணைக்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'One may dig up the world; one may even talk of building
  2. a fence round it; but to say the shoulders of mighty Irāmaṉ
  3. can be conquered is like saying that Cītai's body
  4. can be embraced, sir!'

What the poem says

Kumpakaruṇaṉ tells his brother bluntly that the impossible may be possible, uprooting the earth or fencing it in, but beating Irāmaṉ is as hopeless as winning Cītai's embrace. Each is unthinkable, and one depends on the other.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘kallalām ulakiṉai; varampu kaṭṭavum
collalām; peru vali irāmaṉ tōḷkaḷai
vellalām eṉpatu cītai mēṉiyaip
pullalām eṉpatu pōlumāl aiyā!