கம்பராமாயணம் 7395 · யுத்த 15.82
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
புலத்தியன் வழிமுதல் வந்த - புலத்தியனுடைய மரபிலே வந்த; பொய்யறு குலத்து இயல்பு அழிந்தது - தருமவழி நீங்காத குலத்தின் தன்மை உன் செயலால் அழிந்துவிட்டது; வலத்து இயல் அழிவதற்கு ஏது - அதுவே வெற்றித் தன்மை அழிவதற்குக் காரணமாகும்; கொற்றம் முற்றுமோ - அதனால் உனக்கு வெற்றி கிட்டுமோ?, மையறு நிலத்து இயல் நீர்இயல் என்னும் நீரதால் - இது குற்றமற்ற நிலத்தின் இயல்பே நீரின் இயல்பு என்ற முறைமைக்கு ஏற்றுள்ளது.
நிலத்தின் இயல்புக்கேற்ப நீரின் இயல்பு அமைதல் போலச் செயலின் இயல்புக்கேற்றவாறு விளைவின் இயல்பு என்றவாறு. இனி அரக்கியாகிய நின் தாயின் இயல்புக்கேற்ப இத்தன்மை அமைந்தது போலும் என்ற குறிப்பும் உண்டு.
நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகு மறிவு
என்ற குறட்பாக் கருத்து அமைந்துள்ளது. ஆல்-அசை
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The nature of the flawless clan descended from Pulattiyaṉ
- is ruined; can victory come to completion?
- The cause of the ruin of strength is like the way
- the nature of water follows the nature of the spotless land.'
What the poem says
Kumpakaruṇaṉ reminds Irāvaṇaṉ that they are descended from the sage Pulastya (Pulattiyaṉ), a family of honest and righteous ways. Irāvaṇaṉ's conduct has betrayed that heritage, and that is why victory has deserted him. As water takes on the nature of the soil it flows over, so results take on the nature of deeds.
The commentary cites the Tirukkuṟaḷ couplet that water changes with the ground and a man's mind with the company he keeps; it also sees a hint that Irāvaṇaṉ takes after his demon mother rather than his sage father.