கம்பராமாயணம் 7396 · யுத்த 15.83
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இந்திரற்கு உலகும் கொற்றமும் கொடுத்தனை - சீதையை விட்டிடாத இச்செயலால் உனக்குத் தோற்ற இந்திரனுக்கு அவனுடைய உலகத்தையும் வெற்றியையும் கொடுத்து விட்டாய்; நின் பெருங் கிளையும் கெடுத்தனை - உன்னுடைய பெரிய சுற்றத்தாராகிய அரக்கர்களையும் கெடுத்து விட்டாய்; நின்னையும் படுத்தனை - உன்னையும் நீயே அழித்துக் கொண்டாய்; பலவகை அமரர் தங்களை விடுத்தனை - பலவகையான தேவர்களையும் சிறையில் இருந்து விட வேண்டியவனாய் விட்டாய்; வேறு இனி வீடும் இல்லையால் - இதிலிருந்து நீங்குவதற்கு வேறு வழியும் இல்லை.
வீடு-விடுதலை வழி. "வேறு இனி வீடும் இல்லை” என்றது இராவணன் இயல்பினை நோக்கிக் கூறியது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'You have given Intiraṉ back his world and his victory;
- you have ruined your own great kin; yourself
- you have destroyed; the many kinds of immortals
- you have set free; and now there is no other way out.'
What the poem says
Kumpakaruṇaṉ spells out the consequences of keeping Cītai. Irāvaṇaṉ has in effect handed Indra back his kingdom and his glory, brought ruin on his own kin and himself, and will have to release the gods he holds captive. Given his brother's stubborn nature, Kumpakaruṇaṉ says, there is no escape now.