கம்பராமாயணம் 7397 · யுத்த 15.84

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இன்று அறம் உனக்கு அஞ்சி ஒளித்ததால் - இப்போது உன் செயல் கண்டு அறம் அஞ்சி ஒளித்துக் கொண்டது; முனம் அதன் திறன் உழத்தலின் - முன்பு நீ அறத்தின் கூறுபாட்டை வருந்திச் செய்தலால்; உனக்கு வலியும் செல்வமும் நிறம் அளித்தது - அவ்வறம் உனக்கு வலிமை செல்வம் ஆகிய மேன்மையைக் கொடுத்தது; அங்கு அதனை நீக்கி நீ இற - அத்தருமத்தை நீக்கி நீ அழிகையில்; யார் உனை எடுத்து அங்கு முன் நாட்டுவார் - பிறர் யார் வந்து உன்னை எடுத்து மீட்க வல்லார்.

அறம்பல செய்து தவமும் செல்வமும் வலிமையும் பெற்ற நீ அறம் அலசெய்து அழிகிறாய் என்பது குறிப்பு. முனம், உனை-இடைக்குறைகள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Dharma, afraid of you, has hidden itself today; because
  2. you once laboured at its ways, it gave you strength and wealth
  3. and splendour; now that you have cast it off and are perishing,
  4. who will come to lift you up and set you on your feet?'

What the poem says

Kumpakaruṇaṉ says that Irāvaṇaṉ's power and wealth were the fruit of his past righteous deeds and austerities. Now righteousness, frightened by his conduct, has hidden itself. Having thrown it away, he has nothing to save him from destruction, and no one else can.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘aṟam uṉakku añci iṉṟu oḷittatāl; ataṉ
tiṟam muṉam uḻattaliṉ valiyum celvamum
niṟam uṉakku aḷittatu; aṅku ataṉai nīkki nī
iṟa muṉ aṅku yār uṉai eṭuttu nāṭṭuvār.