கம்பராமாயணம் 7401 · யுத்த 15.88
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தையலை விட்டு - சீதையைச் சிறையில் இருந்து விட்டுவிட்டு; அவன் சரணம் தாழ்ந்து - அந்த இராமனுடைய பாதங்களை வணங்கி, நின் ஐயறு தம்பியொடு அளவளாவுதல் - உனது ஐயப்படத்தகாத தம்பியாகிய வீடணனுடன் நட்புப் பூணுதல்; உய்திறம் - நாம் உயிர் பிழைத்திருக்க ஒரு வழியாகும், அன்று எனின் வேறும் ஓர் செய்திறம் உளது - அவ்வாறு செய்வது நன்றன்று எனின் செய்ய வேண்டிய வேறு ஒரு செயலும் உள்ளது; அன்னது தெரியக் கேட்டியால் - அச்செயலைத் தெளிவாகக் கேட்பாயாக.
ஐயறுதம்பி-உன்னால் ஐயப்படத்தகாத தம்பியாகிய வீடணன், அளவளாவுதல்-நட்புப் பூணுதல். ஐயம் அறுதம்பி-இராமனைப் பரம்பொருளாக உணர்வதில் சிறிதும் ஐயப்பாடு இல்லாத வீடணன் எனினும் ஆம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- To release the lady, bow down at his feet, and make friends
- with your brother who is above all doubt
- is the way to survive. If not, there is one other
- course of action; hear it clearly.
What the poem says
Kumpakaruṇaṉ offers Irāvaṇaṉ two choices. The first, and the way to survive, is to set Cītai free, bow at Irāmaṉ's feet, and be reconciled with their younger brother Vīṭaṇaṉ, who has already gone over to Irāmaṉ.
The phrase describing Vīṭaṇaṉ can mean a brother whom Irāvaṇaṉ has no cause to distrust. It can also mean one who has no doubt that Irāmaṉ is the Supreme. The second choice follows in the next verse.