கம்பராமாயணம் 7405 · யுத்த 15.92
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மானிடர் இருவரை வணங்கி - வலிவற்ற மானிடர் இருவரை வணங்கி, மற்றும் அக்கூனுடைக் குரங்கையும் கும்பிட்டு - அதோடு அமையாமல் மேலும் அந்தக் கூனல் முதுகுடைய குரங்கையும் கும்பிட்டுக்கொண்டு; உய்தொழில் - உயிர் வாழ்ந்திருக்கும் தொழில்; ஊனுடை உம்பிக்கும் - ஊனுடலோடு உயிர் வாழ்தலை விரும்பும், உன் தம்பியாகிய வீடணனுக்கும்; உனக்குமே கடன்- உனக்குமே முறைமையான செயலாகும்; அது யான் புரிகிலேன் - அச்செயலை நான் செய்யேன்; போக எழுக என்றான் - போவதற்கு எழுக என்று இராவணன் கூறினான்.
அக்கூனுடைக் குரங்கு-அனுமன். மந்திரப் படலத்தில் வரும் "சுட்டது குரங்கு எரி சூறையாடிக் கெட்டது கொடி நகர்" என்ற (6082) வரியை இணைத்து நோக்குக. கடன்- சிறையான செயல் நீயும் உம்பியும் ஊனுடலோடு உயிர் வாழ விரும்புகிறீர்கள். புகழை விரும்பவில்லை என்பது கருத்தாகக் கொள்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “To bow before two men, and on top of that
- to worship that hunchbacked monkey, and so stay alive,
- is the proper business of your flesh-loving brother and of you;
- I will do no such thing. Get up and go!” he said.
What the poem says
Irāvaṇaṉ throws Kumpakaruṇaṉ's peace proposal back at him. Grovelling before two humans and the hunchbacked monkey, Aṉumaṉ, who burned Ilaṅkai, may suit Vīṭaṇaṉ and Kumpakaruṇaṉ. They care only for keeping their bodies alive. Irāvaṇaṉ cares for glory and will never bow. He orders his brother out of his sight.