கம்பராமாயணம் 7408 · யுத்த 15.95

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
“
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘வென்று இவண் வருவென் என்றுக்கிலேன்; விதி
நின்றது, பிடர் பிடித்துஉந்த நின்றது;
பொன்றுவென்; பொன்றினால்,பொலன்கொள் தோளியை,
“நன்று “ என, நாயக,விடுதல் நன்று அரோ.

பொருள் · Meaning in Tamil

நாயக - தலைவனே: இவண் வென்று வருவென் என்று உரைக்கிலேன் - இங்கு மீண்டும் வெற்றி பெற்று வருவேன் என்று சொல்ல இயலாமல் உள்ளேன் என்று; விதி நின்றது - வெல்லுதற்கரிதாய் நின்றதாகிய விதி; பிடர் பிடித்து உந்த நின்றது - கழுத்தின் புறத்தைப் பிடித்துத் தள்ளும்படி நின்றது; பொன்றுவென் - அதனால் யான் போரில் இறந்து விடுவேன்; பொன்றினால்-அவ்வாறு யான் அழிந்தால்; பொலன் கொள் தோளியை -அழகு கொண்ட தோளையுடைய சீதையை; நன்று என விடுதி - உனக்கு நன்மை என்று கருதி விட்டிடுவாய்; நன்று - அவ்வாறு விட்டிடுதலே உனக்கு நன்மை பயக்கும்.

அரோ-அசை

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “I will not say that I shall win and come back here; Fate
  2. stands over me, stands ready to seize me by the neck and push;
  3. I shall die. And if I die, my lord, let go
  4. the lady of the lovely shoulders, thinking it for the best; that is good.”

What the poem says

Kumpakaruṇaṉ's last words to Irāvaṇaṉ are a prophecy of his own death. He cannot promise victory. Fate has him by the scruff of the neck and is pushing him toward his end.

He makes one request: once he has fallen, Irāvaṇaṉ should release Cītai, because that alone will do him good. Kumpakaruṇaṉ goes to fight out of loyalty, knowing the war is unjust and lost.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘veṉṟu ivaṇ varuveṉ eṉṟu uraikkilēṉ; viti
niṉṟatu, piṭar piṭittu unta niṉṟatu;
poṉṟuveṉ; poṉṟiṉāl, polaṉ koḷ tōḷiyai,
“naṉṟu “ eṉa, nāyaka, viṭuti naṉṟuarō.