கம்பராமாயணம் 741 · பால 12.3

Section பால காண்டம் / 12. கார்முகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உறு வலி யானையை ஒத்த மேனியர்,
செறி மயிர்க் கல் எனத் திரண்ட தோளினர்,
அறுபதினாயிரர், அளவு இல் ஆற்றலர்,
தறி மடுத்து இடையிடை தண்டின் தாங்கினர்.

பொருள் · Meaning in Tamil

(விற்சாலையுள் புகுந்த ஏவலாளர் தெரிவித்தவாறு) உறுவலி யானையை - மிக்க வலிமையுடைய யானையை; ஒத்த மேனியர் - ஒத்த திடமான உடலையுடையவர்களும்; கல் எனத் திரண்ட - மலை போலத் திரண்டு; மயிர் செறி தோளினர் - மயிர் அடர்ந்த தோளினரும்; அளவு இல் ஆற்றலர் - அளவிடமுடியாத வல்லமையுடையவர்களுமாகிய; அறுபதினாயிரர் - அறுபதினாயிரம் வீரர்கள்; இடை இடை - (அந்த வில்லின்) நடு இடங்களில், தறி மடுத்து - தூண்களை வைத்து; தண்டில் - (அத் தூண்களோடு நெடுகக் கட்டிய) தண்டுகளில்; தாங்கினர் - (தம் தோள்களில்) வைத்து சுமந்து வந்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Men whose bodies were like elephants of surpassing strength,
  2. with hairy shoulders massed like rock,
  3. sixty thousand of them, of measureless might,
  4. set posts beneath it at intervals and bore it on poles.

What the poem says

Caṉakaṉ has ordered the great bow of Civaṉ brought out so that the visitors can see it. Here the porters arrive: sixty thousand huge, elephant-like men carry it, setting it on posts along its length and lashing those to poles they shoulder.

The sheer number of bearers is Kampaṉ's first measure of the bow's size and weight, before anyone has tried to lift it alone.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uṟuvali yāṉaiyai otta mēṉiyar,
ceṟi mayirk kal eṉat tiraṇṭa tōḷiṉar,
aṟupatiṉāyirar, aḷavu il āṟṟalar,
taṟi maṭuttu iṭaiyiṭai taṇṭil tāṅkiṉar.