கம்பராமாயணம் 742 · பால 12.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நெடுநில மகள் - பெரிய இப் பூமிதேவி; முதுகு ஆற்ற - (நெடுங்காலமாக அந்த வில்லைத் தாங்கியதனால் ஏற்பட்ட) முதுகின் நோவை ஆற்றிக் கொள்ளவும்; நின்று உயர் - நிலைபெற்று ஓங்கிய; தடம் நிமிர் வடவரைதானும் - பெரிய மேரு மலையும்; நாண் உற - (வில்லின் தோற்றம் கண்டு) வெட்கம் அடையவும்; கடல் புரை திருநகர் - கடல்போல் பரந்துபட்ட மக்கள்; உலகு எங்கணும் - உலகத்திலே எங்கும்; இடம் இலை என - இடம் இல்லை என்று சொல்லும்படி; வந்தது - (அச்சிவ) வில்லானது (சுமக்கப்பட்டு) வந்தது.
உலகத்தவர் திரண்டு காணுமாறு அச்சிவ வில் ஆயிரக் கணக்கான பணியாளரால் தாங்கப்பட்டு வந்தது. நெடுங்காலமாகச் சிவதனுசைத் தாங்கியதனால் நோவுற்ற பூமிக்கு இப்போது இளைப்பாற இடம் ஏற்பட்டது. நகர் - ஆகு பெயர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that the vast Earth might ease her back, and so that even the firm, towering,
- great northern mountain Mēru would be put to shame,
- it came, while the world seemed to have no room left anywhere,
- as the splendid city, vast as the sea, thronged roaring to see it.
What the poem says
The bow is carried into the assembly. Two playful images frame its arrival: the Earth, who has carried it for ages, can at last rest her aching back, and Mēru, the great golden mountain of the north, is shamed because the bow outdoes it in size.
The whole populace of the city, spread out like a sea, crowds in to look, so that there seems to be no space left in the world. "City" here stands for its people.