கம்பராமாயணம் 743 · பால 12.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சங்கொடு சக்கரம் - சங்கு சக்கரங்களை; தரித்த செங்கைய - தாங்கிய செம்மையான கைகளையுடைய; சிங்க ஏறு அல்லனேல் - ஆண்சிங்கம் போன்ற திருமால் (நாணேற்றி) வளையாமல் போனால்; இதனை - இந்தச் சிவதனுசை; தீண்டுவான் ஒருவன் - தீண்டுவதற்கும் தகுதியுள்ள ஒருவன்; எங்கு உளன் - (வேறு) எங்கே இருக்கொன்?; இன்று - இன்றைய தினம்; இச்சிலை ஏற்றின் - (அத் திருமாலே வந்து) இந்த வில்லை நாணேற்றி வளைப்பானாயின்; மங்கைதன் திருமணம் - சீதையின் திருமணமானது; வாழும் - நல்வாழ்வு பெறும்; என்பார் - என்று கூறினர் (சிலர்).
சிங்க ஏறு - திருமால். விசுவாமித்திரன் அழைத்து வந்த இச்சிறுவன் திருமாலாயிருப்பின் இது கைகூடுதலும், சீதை நன்மணம் பெறுதலும் கூடும் என்பதாம். ஏனெனில், திருமாலைத் தவிர வேறு யாராலும் இவ்வில்லைத் தீண்டுதல் என்பதும் இயலாது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Unless it is that lion among males whose red hands bear
- the conch and the discus, where is the one
- who could even touch this? If this bow is strung today,
- the maiden's wedding will flourish,' some said.
What the poem says
The onlookers begin to talk among themselves. Some say that only Tirumāl, who carries the conch and discus, could so much as touch this bow; if he himself came and strung it, Cītai's marriage would be blessed.
The remark carries an unspoken hint: if the boy whom Vicuvāmittiraṉ has brought is in truth Tirumāl, the bow will be strung and Cītai will find her true husband.