கம்பராமாயணம் 7412 · யுத்த 15.99

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அவ்வழி - அப்போது; இராவணன் அனைத்து நாட்டமும்- தன் இருபது கண்களிலும்; செவ்வழி நீரொடும் - நேரே வழிகின்ற கண்ணீருடன்; குருதி தேக்கினான் - குருதியையும் வெளிவிடாது தடுத்துத் தேக்கினான்; எவ்வழியோர்களும் - பிற எல்லா உறவின் வழி வந்தவர்களும்; இரங்கி ஏங்கினார்- இரக்கம் மிகக்கொண்டு ஏக்கம் உற்றனர்; இவ்வழி - இவ்வாறு நிகழும் பொழுதே; அவனும் போய் - அக்கும்பகருணனும் போய்; வாயில் எய்தினான் - நகர் வாயிலை அடைந்தான்.

இராவணன் அனைத்து நாட்டமும் நீரும் குருதியும் தேக்கப் பிற உறவினர் இரங்கி ஏங்கக் கும்பகருணன் வாயில் எய்தினான் என்க. போர்க்களத்துக்கு வீர வழி அனுப்பு அமையாது சோக வழியனுப்பு இங்கு அமைவது பின்வருவது காட்டும் குறிப்பினதாம். இப்பாடலில் வரும் தேக்கினான் என்ற கவிதைச் சொல், ஆழ்ந்து நோக்கத்தக்கது. குருதி தேக்கினான், செவ்வழி நீர் தேக்கினான் என இணைக்க. உறவினர் இரங்கி ஏங்க இராவணன் கண் சிவந்து கண்ணீர் சில தெறியா நின்ற நிலை அவனது பாசமும் மன உறுதியும் நடத்தும் போராட்டத்தில் மன உறுதி வெற்றி பெற்றதையும், காமம் கைமிகுந்த நிலையிலும் பாசமும் மன உறுதியும் குலையாத தன்மையையும் இக்கவிதைச் சொல்லின் வழி உணரலாம்.

எவ்வழியோர்கள்-எல்லாப் பக்கங்களிலும் உள்ளவர்கள் எனலுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Then Irāvaṇaṉ, in all his eyes,
  2. held back blood along with the tears that welled up;
  3. kinsfolk on every side grieved and sighed;
  4. and meanwhile he went on and reached the gate.

What the poem says

As Kumpakaruṇaṉ leaves, Irāvaṇaṉ's twenty eyes fill with tears and turn red as blood, but he holds them back. His relatives all around are overcome with pity and sorrow. Kumpakaruṇaṉ, meanwhile, walks to the city gate.

This is a sad farewell, not a hero's send-off, and it hints at what is coming. The word "held back" is the key to the verse. In Irāvaṇaṉ, love for his brother fights with stubborn resolve, and resolve wins, even though his passion for Cītai has overwhelmed his judgment.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1av vaḻi irāvaṇaṉ aṉaittu nāṭṭamum
cev vaḻi nīroṭum kuruti tēkkiṉāṉ;
ev vaḻiyōrkaḷum iraṅki ēṅkiṉār;
iv vaḻi avaṉum pōy vāyil eytiṉāṉ.