கம்பராமாயணம் 7418 · யுத்த 15.105
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தோமரம் - பெரிய மரங்களையும்; சக்கரம் - சக்கர வடிவில் அமைந்த வீசு படைகளையும்; சூலம் - முத்தலைச் சூலங்களையும், கோல் - அம்புகளையும்; மழு - கோடறிப் படையினையும்; நாமவேல் - பகைவருக்கு அச்சம் உண்டாக்கும் வேல் படைகளையும், உலக்கை -உலக்கைகளையும்; வாள் - வாள் படைகளையும், நாஞ்சில் - கலப்பை வடிவில் அமைந்த படைக்கலங்களையும்; தண்டு -பெரிய தண்டாயுதங்களையும்; எழு - இரும்பு உலக்கைகளையும்; வாமவில் - வளைந்த பெரிய வில்களையும், வல்லையம் -எறி ஈட்டிகளையும்; கணையம் - வளை தடிகளையும்; மற்று உள - மற்றுமுள்ள பிற; சேம வெம்படை -கையில் உள்ள படைக்கலங்கள் தீர்ந்தபோது பயன்படுத்தப்படும் சேமிப்புப் படைக்கலங்கள்; எலாம் - எல்லாவற்றையும்; சுமந்து சென்றவால் - கும்பகருணனுடன் சென்ற சேனைகள் சுமந்து சென்றன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Lances, discuses, tridents, arrows, battle-axes,
- dread spears, pestles, swords, plough-blades, maces, iron bars,
- curved bows, javelins, cudgels and every other
- fierce weapon held in reserve—all these they carried along.
What the poem says
The troops marching with Kumpakaruṇaṉ carry a huge store of spare weapons. When his own weapons break or run out, he can be supplied again. The verse simply lists the arms: lances, discuses, tridents, arrows, axes, spears, pestles, swords, plough-shaped blades, maces, iron bars, bows, javelins and cudgels.