கம்பராமாயணம் 7423 · யுத்த 15.110
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விண் தொடும் சேண் உயர் கொடியது - விண்ணைத் தொடுகின்ற மிக உயர்ந்த கொடியில் இருப்பது; வீணை என்று உணரின் - வீணை என்று எண்ணினால்; அஃது அன்று - அது இல்லை; வய வெஞ்சீயமால் - வெற்றி பொருந்திய கொடிய சிங்கமாகும்; காணினும் - மிக்க வேகத்துடன் கண்டாலும்; காலின் மேல் அரிய காட்சியன் - காற்பகுதிக்கு மேல் முழுதும் பார்த்தற்கரிய பெருந்தோற்றமுடையவனாய் இருக்கிறான்; பூண் ஒளிர் மார்பினன்- அணிகலன் ஒளி விடுகின்ற மார்பை உடையவனாய் இருக்கிறான்; யாவன் போலுமால் - இவன் யாவனோ?
வீணை: இராவணன் கொடியில் உள்ள சின்னம். சிங்கம்- கும்பகருணன் கொடியில் உள்ள சின்னம். வீணை என்றமையால் இராவணன் அல்லன் என்று தெளிந்தவாறு. ஆல்- அசை
ஆங்கிலம் · English translationAI
Translation
- “If one takes it for a vīṇā, it is not; on the banner
- rising far up to touch the sky is a fierce, victorious lion;
- even if one looks, he is hard to see above the legs;
- his chest gleams with ornaments. Who can he be?”
What the poem says
Irāmaṉ asks Vīṭaṇaṉ who the giant is. Irāvaṇaṉ's banner bears a vīṇā, the stringed instrument, but this banner bears a lion, so it is not Irāvaṇaṉ.
The figure is so tall that even a quick glance cannot take in anything above his legs. All Irāmaṉ can make out clearly is a chest blazing with jewels.