கம்பராமாயணம் 7424 · யுத்த 15.111
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தோளொடு தோள் செலத் தொடர்ந்து - இவனுடைய ஒரு தோளோடு மற்றொரு தோள் வரை முழுவதும்; தொடர்ந்து - தொடர்ச்சியாக; நோக்குறின் - பார்க்க முயலின்; பலநாள் கழியுமால் - பலநாள் கழிந்துவிடும்; நடுவண் நின்றது ஓர் தாளுடை மலை கொலாம் - உலகுக்கு நடுவில் உள்ள ஒப்பற்ற கால் முளைத்த மேருமலை இவ்வாறு வந்தது கொல்லோ?; சமரம் வேட்டது ஓர் ஆளென உணர்கிலேன் - இவனைப் போரை விரும்பி வந்த ஒரு வீரனென்று நினைக்க முடியவில்லை, ஆர்கொலாம் இவன் - இவன் யாரோ.
வீரர்களில் இப்படி இருப்பவரைக் கண்டதில்லையாகையால் இராமன் வியந்து, "சமரம் வேட்டது ஓர் ஆளென உணர்கிலேன்” என்றான் என்க. தாளுடை மலை என்பதைத் தாளுடை மலையோ என மாற்றி உரைக்க. ஆல் ஆம்-அசைகள். கொல்- ஐயப்பொருளில் வந்த இடைச்சொல். சமரம்-போர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “If one tried to look along from one shoulder to the other,
- many days would pass; is it the mountain standing at the world's centre
- grown legs? I cannot take him for a man
- who has come seeking battle. Who can he be?”
What the poem says
Irāmaṉ's amazement grows. It would take days to look from one of the stranger's shoulders to the other. He wonders whether Mount Mēru, the mountain at the centre of the world, has grown legs and walked onto the field.
Irāmaṉ has never seen a warrior like this. He cannot think of him as just a soldier who has come to fight.