கம்பராமாயணம் 7428 · யுத்த 15.115

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எந்தாய்! - எந்தாய்; தவன் நுணங்கியரும் - தவத்தால் உடல் சுருங்கி அறிவுக் கூர்மை பெற்ற தவத்தரும்; வேதத் தலைவரும் - வேதத் தலைவர்களான அந்தணரும், உணருந்தன்மைச் சிவன் - உணர்வைப் பெறுவதற்காக உபாசனை செய்கின்ற சிவபிரானால் உணர்ந்து - தியானிக்கப்பட்டு; அலரின் மேலைத் திசைமுகன் உணரும் - தாமரை மலரிலே வாழ்கிற பிரமனாலும் தியானிக்கப்படுகிற; தேவன் அவன் - தேவனாகிய அந்தத் திருமால், உணர்ந்து எழுந்த காலத்து - அரிதுயில் நீங்கிப் பக்தர்களைக் காக்க எழுந்த காலத்தில்; அசுரர்கள் படுவது எல்லாம் - அசுரர்கள் எல்லாம் இறப்பர்; இவன் உணர்ந்து எழுந்த காலத்து - இக்கும்பகருணன் துயில் நீங்கி எழுந்த காலத்தில்; இமையவர் படுவர் - தேவர்கள் இறப்பர்

மூவர்க்கும் முதல்வனின் பரத்துவம் கூறியவாறு. அன்பர்க்காகத் தீமையை அழிக்கும் அவன் செயலையும், நன்மையை அழிக்கும் இவன் செயலையும் ஒப்பிட்டுக் கூறிக் கும்பகருணன் திருமாலை ஒத்த வலியுடையவன் என்று கூறியவாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “The God whom ascetics worn thin by penance and the masters of the Veda know,
  2. whom Civaṉ meditates on, whom the four-faced one on the lotus contemplates—
  3. all that the asuras suffer when He wakes and rises,
  4. the gods suffer when this one wakes and rises, my father!”

What the poem says

Vīṭaṇaṉ compares Kumpakaruṇaṉ to Tirumāl, Viṣṇu, the Supreme God. Ascetics, Vedic sages, Civaṉ and four-faced Piramaṉ all meditate on Him. When Viṣṇu wakes from his cosmic sleep, the asuras are destroyed. When Kumpakaruṇaṉ wakes from his sleep, it is the gods who are destroyed.

The comparison shows that Kumpakaruṇaṉ's strength rivals Viṣṇu's, but it is used for evil rather than good. Vīṭaṇaṉ is also quietly speaking to Irāmaṉ, who is Viṣṇu himself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘tavaṉ nuṇaṅkiyarum vētat talaivarum uṇarum taṉmaic
civaṉ uṇarntu, alariṉ mēlait ticaimukaṉ uṇarum tēvaṉ
avaṉ uṇarntu eḻunta kālattu acurarkaḷ paṭuvatu ellām
ivaṉ uṇarntu eḻunta kālattu imaiyavar paṭuvar, entāy!