கம்பராமாயணம் 7438 · யுத்த 15.125

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘மறுத்த தம் முனை வாய்மையால்
ஒறுத்தும் ஆவது உணர்த்தினான்;
வெறுத்து ‘மாள்வது மெய் ‘எனா
இறுத்து நின் எதிர் எய்தினான் ‘

பொருள் · Meaning in Tamil

மறுத்த தம்முனை - தையலை விட மறுத்த தன் முன்னவனாகிய இராவணனை; வாய்மையால் - தன் வாய்மைப் பற்றின் காரணமாக; ஒறுத்தும் - வன் சொற்களால் கடிந்து கூறியும்; ஆவது உணர்த்தினான் - நடக்க இருப்பது பற்றி அறிவு கொளுத்தினான்; வெறுத்தும் - பலவாறு கூறியும் இராவணன் கேளாமையால் வெறுப்புக் கொண்டு; மாள்வது மெய்- இறப்பது உண்மை; எனா இறுத்து - என்று முடிவாகக் கூறிவிட்டு; நின் எதிர் எய்தினான் - இவன் உன் எதிரே வந்து சேர்ந்தான்.

எத்தகையோர் ஆட்சியிலும் ஒற்றர் ஊடுருவி அறிந்து செல்வர் ஆதலின் கும்பகருணன் புறப்பாட்டின் போது நிகழ்ந்த நிகழ்ச்சிகளை வீடணன் அறிதல் இயல்பானதே.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “His elder brother refused, but out of truthfulness
  2. he rebuked him and made him see what would come;
  3. then, in disgust, saying ‘Death is certain,’
  4. he ended it and has come here to face you.”

What the poem says

When Irāvaṇaṉ refused to give up Cītai, Kumpakaruṇaṉ held to the truth and rebuked him harshly, warning him what would happen. When nothing he said made any difference, he declared that his own death was certain and came out to face Irāmaṉ.

Vīṭaṇaṉ knows what happened at Kumpakaruṇaṉ's departure because spies get into every court.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘maṟutta tammuṉai vāymaiyāl
oṟuttum āvatu uṇarttiṉāṉ;
veṟuttum ‘māḷvatu mey ‘eṉā
iṟuttu niṉ etir eytiṉāṉ ‘