கம்பராமாயணம் 7440 · யுத்த 15.127
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்று அவன் உரைத்தலோடும் - என்று அந்த வீடணன் கூறிய உடனே; இரவி சேய் - சூரியன் மகனாகிய சுக்கிரீவன்; இவனை இன்று - இக்கும்பகருணனை இப்போரில்; கொன்று ஒரு பயனும் இல்லை - கொன்று பயன் ஒன்றும் இல்லை; கூடு மேல் கூட்டிக்கொண்டு - இவன் நம்மொடு சேர்வான் ஆனால் சேர்த்துக்கொண்டு; நின்றது புரிதும் - மேல் நிகழ வேண்டிய செயல்களைச் செய்வோம்; இந்நிருதர் கோன் இடரும் நீங்கும் - இந்த அரக்கர் தலைவனான வீடணனது துன்பமும் நீங்கும்; நன்று என்று நினைந்தேன் என்றான் - இதுவே நல்லது என நான் நினைத்தேன் என்றான்; நாதனும் - இராமனும்; இது நயன் என்றான் - இச்செயல் அரசநீதிக்கு ஏற்றது என்று கூறினான்.
தானே வராத கும்பகருணனை இராமன் பக்கமே சேர்த்தல் நலம் எனச் சுக்கிரீவன் கூறலும் இராமன் அதற்கு உடன்படலும் சந்தி விக்ரகம் என்ற போர் சார் உத்திகளில் விக்கிரக உத்தியென்க. துணை வலி தூக்கி அத்துணையைப் பிரிக்கும் முயற்சியே சுக்கிரீவனின் இக்கூற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As soon as he had said this, the Sun's son said, “To kill him today
- would gain us nothing; if he will join us, we should take him in
- and do what remains; and this demon lord's grief will end too.
- I thought this good.” And the Lord said, “This is wise.”
What the poem says
Cukkirīvaṉ, son of the Sun, hears Vīṭaṇaṉ's account and proposes winning Kumpakaruṇaṉ over instead of killing him. If he joins them, they can finish the war with him on their side, and Vīṭaṇaṉ will be spared the grief of losing his brother. Irāmaṉ agrees that this is sound policy.
This is a classic stratagem of statecraft: weigh the strength of the enemy's allies and try to detach them.