கம்பராமாயணம் 7442 · யுத்த 15.129

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தந்திரக் கடலை நீந்தி- குரக்குச் சேனையாகிய பெருங்கடலை அரிதில் கடந்து; தன்பெரும் படையைச் சார்ந்தான் - தனது பெரிய அரக்கர் சேனையை வீடணன் சென்று சேர்ந்தான்; வெந்திறலவனுக்கு - அவனது வரவு கண்ட அரக்கப்படையினர் கொடும் வலிமையுடைய அந்தக் கும்பகருணனுக்கு; ஐய! - தலைவனே; வீடணன் விரைவில் உன்பால் வந்தனன் - வீடணன் விரைவாக உன்னிடத்து வருகிறான்; என்னச் சொன்னார் - என்று சொன்னார்கள்; வரம்பு இலா உவகை கூர்ந்து - அது கேட்டு எல்லை இல்லாத மகிழ்ச்சி மிக்கு; சிந்தையால் களிக்கின்றான் தன் - மனமகிழ்பவனாகிய கும்பகருணனது; செறிகழல் சென்னி சேர்த்தான் - வீரக்கழல் அணிந்த கால்கள் தன் தலைமேல் படும்படி வீடணன் நிலத்தில் விழுந்து வணங்கினான்.

தந்திரக்கடல்-உருவகம். ஐய-அண்மை விளி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Swimming across the sea of troops, he reached his own great army;
  2. they told that man of fierce might, “Sir, Vīṭaṇaṉ
  3. has come in haste to you”; and filled with boundless joy
  4. he rejoiced at heart, and Vīṭaṇaṉ laid his head at his anklet-bound feet.

What the poem says

Vīṭaṇaṉ makes his way through the sea-like monkey army and reaches the demon host he once belonged to. The demons tell Kumpakaruṇaṉ that his younger brother is coming. Kumpakaruṇaṉ is overjoyed. Vīṭaṇaṉ falls at his feet and touches his head to them.

"Sea of troops" is a metaphor for the vast monkey army.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tantirak kaṭalai nīnti, taṉ perum paṭaiyaic cārntāṉ;
ven tiṟalavaṉukku, ‘aiya! vīṭaṇaṉ viraivil uṉpāl
vantaṉaṉ ‘eṉṉac coṉṉār; varampu ilā uvakai kūrntu,
cintaiyāl kaḷikkiṉṟāṉtaṉ ceṟikaḻal ceṉṉi cērttāṉ