கம்பராமாயணம் 7443 · யுத்த 15.130
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மழையின் நீர் வழங்கு கண்ணான் - மழை போல கண்ணீர் சொரியும் கண்களையுடையவனான கும்பகருணன்; முந்தி வந்து இறைஞ்சினானை - தன் முன்னே வந்து வணங்கியவனாகிய வீடணனை; மோந்து - உச்சி மோந்து; உயிர் மூழ்கப் புல்லி- ஈருடலும் ஒருயிரும் ஆகுமாறு இறுகத் தழுவி; ஒருவன் உய்ந்தனை போனாய் என- நீ ஒருவனாவது விலகிச் சென்று உய்ந்து விட்டாய் என்று எண்ணி; மனம் உவக்கின்றேன் - மனம் பெருங்களிப்புக் கொள்ளுகிற; தன் - என்னுடைய; சிந்தனை முழுதும் சிந்த - மன எண்ணம் முழுவதும் சிதறிக் கெடுமாறு; தெளிவு இலார் போல- அறம் இது மறம் இது என மனத் தெளிவில்லாதவர் போல; மீள- மீண்டும்; தனியே வந்தது என் என்றான் - தனியாக வந்தது என்ன காரணம் கருதியோ என வினாவினான்.
நீ இராமபிரானுடன் வரவேண்டியவன் அல்லவா? அப்படி இருக்கத் தனியே வந்ததற்கு என்ன காரணம் என ஐயத்தோடு வினவியவாறு. மழையின் நீர் வழங்குகண்-அவலக்குறிப்பு. உயிர் மூழ்கப் புல்லல் பாசத்தின் மிகுதியைக் காட்ட வந்தது. இங்கு மற வழிப் பட்ட அண்ணனும் வாழவேண்டும், அறவழிப்பட்ட தம்பியும் வாழவேண்டும் எனத் துடிக்கும் பாசப் பெருந்திறலைக் கும்பகருணன் வழியே காணலாம். அன்புடையர் என்பும் உரியர் பிறர்க்கு என்ற தமிழ் மறைக்கேற்ற பேரிலக்கிய வாழ்வல்லவா கும்பகருணனின் வாழ்வு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He who had come and bowed first, he kissed on the head and hugged so that their lives merged,
- “I rejoice at heart that one of us at least has gone away and been saved;
- now, scattering all my thoughts, like those who cannot see clearly,
- why have you come back alone?” he asked, his eyes pouring tears like rain.
What the poem says
Kumpakaruṇaṉ, tears falling like rain, kisses his brother's head and holds him so tightly that they seem to share one life. He had been glad that at least one brother had escaped the doom of their house. Why has Vīṭaṇaṉ come back alone, as if he could not tell right from wrong? Surely his place now is beside Irāmaṉ.
Kumpakaruṇaṉ wants both brothers to live: the elder who has chosen wrong and the younger who has chosen right. His love recalls the Tirukkuṟaḷ line saying that the loving give even their bones to others.