கம்பராமாயணம் 7445 · யுத்த 15.132
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குமர - குமரனே; மன்ன - மன்னவனே; குலத்து இயல்பு அழிந்ததேனும் - புலத்தியன் வழிமுதல் வந்த பொய்யறு குலத்தின் தன்மை வேறு ஒருவன் இல்லுறை தவத்தியை மறை துறந்து சிறை வைத்ததால் அழிந்து விட்டதாயினும்; உன்னைக் கொண்டு - உன்னை முதலாகக் கொண்டு, புலத்தியன் மரபு மாயாப் புண்ணியம் பொருந்திற்று - அப்புலத்தியன் கால்வழி அழிந்திடாத புண்ணியத்தைப் பெற்றது; என்னா - என்று; வலத்து இயல் தோளை நோக்கி மகிழ்கின்றேன் - நான் என் வெற்றி பொருந்திய தோளைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளுகின்றேன்; வாயை உலத்தினை திரிய வந்தாய் - ஆனால் நீ என் வாய் ஈரம் உலருமாறு திரும்பி வந்தாய்; அந்தோ உள்ளம் உளைகின்றது - அதுகண்டு ஐயோ என் உள்ளம் வருந்துகின்றது என்றவாறு.
தோள்கள் சோதரர்கள் ஆதலின் கும்பகருணனது ஒரு தோளாகிய இராவணன் பாழானாலும் ஒரு தோளாகிய வீடணன் ஏற்றம் பெற்றதால் "தோளை நோக்கி மகிழ்கின்றேன்" என்றான். குமர-உறவுக் குறிப்பு. அண்மை விளி மன்ன வீடணன் அடைந்த அடைக்கலம் சார் அண்மை விளி. இருமுறை வந்துள்ள விளிச் சொற்கள் கும்பகருணனின் மனக்குழப்பத்தைக் காட்டும் வகையில் அமைந்துள்ளன. புலத்தியன், விச்சிராவசு, இராவணன் எனக் குலமரபு காண்க. கேகசி இராவணனின் தாய். வலம்-வெற்றி. உலத்தினை-வாய் ஈரம் உலரச் செய்தனை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “‘Though the nature of our clan is ruined, my boy, through you
- the line of Pulattiyaṉ has gained a merit that will never die,’
- I said, and gazed with joy at my victorious shoulder; but, my king,
- you have dried my mouth by coming back; alas, my heart is in torment.”
What the poem says
Kumpakaruṇaṉ explains his grief. Irāvaṇaṉ's abduction of another man's wife has disgraced their clan, the line descended from the sage Pulattiyaṉ. Through Vīṭaṇaṉ, though, the line had won lasting merit, and Kumpakaruṇaṉ looked at his own shoulder with pride.
Brothers are spoken of as one's shoulders, or arms. One "shoulder", Irāvaṇaṉ, has gone to ruin, but the other, Vīṭaṇaṉ, has been raised up. Now Vīṭaṇaṉ's return leaves Kumpakaruṇaṉ's mouth dry with fear for him. He calls Vīṭaṇaṉ both "my boy" and "my king", a sign of his mixed feelings.