கம்பராமாயணம் 7446 · யுத்த 15.133

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அறப் பெருந்துணைவர் தம்மை - தர்மத்தின் தனிமை தீர்ப்பானாகி அறத்திற்குப் பெருந்துணைவரான இராமனை; அபயம் என்று அடைந்த நின்னை - சரணம் என்று அடைந்த உன்னை; தங்கள் ஆர் உயிர் துறந்த போதும் - தங்களுடைய அருமையான உயிர் நீங்கப் போதிற நிலை வந்தாலும்; துறப்பது துணியார் - கை விடுவதற்குத் துணியமாட்டார்கள்; இறப்பு எனும் பதத்தை விட்டாய் - நீ இராமனையடைக்கலமாக அடைந்ததால் இறப்பு என்னும் நிலையைக் கடந்துவிட்டாய்; இராமன் என்பளவும் மற்று இப்பிறப்பு எனும் புன்மை இல்லை - இராமனது திருநாமத்தைக் கூறிக் கூறி வரும் உனக்குப் பிறப்பு என்னும் இழிவும் இல்லை; நினைந்து பெயர்ந்த வண்ணம் என் - அப்படியிருக்கும் போது நீ நினைத்து இங்கு மீண்டு வந்தது எதனால் என்றவாறு.

கொல்-ஐயப் பொருளில் வந்தது வந்த இடைச்சொல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Those great allies of righteousness would never resolve
  2. to abandon you, who came to them for refuge, even if they lost their own precious lives;
  3. you have left behind the fear of death; while you say ‘Irāmaṉ’, there is
  4. no more the baseness of being born. What were you thinking, to turn back?”

What the poem says

Kumpakaruṇaṉ cannot see why Vīṭaṇaṉ has come back. Irāmaṉ and his brother champion righteousness, and they would never abandon someone who sought refuge with them, even at the cost of their own lives. By taking refuge in Irāmaṉ, Vīṭaṇaṉ has gone beyond death. As long as he repeats Irāmaṉ's name, he is free from the misery of rebirth. Why would he give that up?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘aṟap perun tuṇaivar, tammai apayam eṉṟu aṭainta niṉṉait
tuṟappatu tuṇiyār, taṅkaḷ ār uyir tuṟanta pōtum
iṟappu eṉum payattai viṭṭāy; irāmaṉ eṉpaḷavum maṟṟu ip
piṟappu eṉum puṉmai illai:niṉaintu eṉkol peyarnta vaṇṇam?