கம்பராமாயணம் 745 · பால 12.7

Section பால காண்டம் / 12. கார்முகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(இந்த வில்); திண்நெடு மேருவை - வலிய நெடிய மேருவை; திரட்டிற்றோ - திரட்டிச் செய்ததோ; என்பார் - என்று சொல்பவர்களும்; வண்ணவான் கடல் - அழகிய நீண்ட பாற்கடலை; பண்டு கடைந்த - முன்பு கடைந்த; மத்து என்பார் - மத்தாகிய மந்தர மலையே என்று சொல்பவர்களும்; அண்ணல் வாள் - பெருமை மிகுந்த ஒளியுள்ள; அரவினுக்கு அரசனோ - பாம்புகளுக்கு அரசனாகிய ஆதிசேடனோ; என்பார் - என்று கூறுபவர்களும்; விண் இடு - வானத்தில் இடுகின்ற; நெடிய வில் - நீண்ட இந்திரவில்லே; வீழ்ந்ததோ என்பார் - தவறிக் கீழே விழுந்துவிட்டதோ என்று சொல்பவர்களும்.

வில்லைக் கண்டவர் பலபடியாகப் புனைந்து கூறினர் என்பது - தற்குறிப்பேற்ற அணி. பாம்பு வில்லுக்கு உவமையாதல் - “அரவின் தோற்றமே போலும் சிலை” - சீவக. 2158

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Was it made by rolling up the strong, tall Mēru?' some said;
  2. 'It is the churning-stick that once churned the bright, wide sea,' some said;
  3. 'Is it the king of the majestic, gleaming serpents?' some said;
  4. 'Has the long bow set in the sky fallen to earth?' some said.

What the poem says

The crowd keeps guessing at what the bow really is: Mēru rolled into shape; Mount Mantara, the churning-rod the gods and demons used on the ocean of milk; Āticēṭaṉ, king of serpents; or the rainbow, Indra's bow, fallen from the sky.

Each guess imagines a cause for what is seen, a figure Tamil poetics calls taṟkuṟippēṟṟam. The serpent likened to a bow also appears in Cīvaka Cintāmaṇi.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tiṇ neṭu mēruvait tiraṭṭiṟṟō? eṉpār;
'vaṇṇa vāṉ kaṭal paṇṭu kaṭainta mattu' eṉpār;
'aṇṇal vāḷ araviṉukku aracaṉō?' eṉpār;
'viṇ iṭu neṭiya vil vīḻntatō?' eṉpār.