கம்பராமாயணம் 746 · பால 12.8

Section பால காண்டம் / 12. கார்முகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'என் இது கொணர்க என இயம்பினான்?' என்பார்;
'மன்னவர் உளர் கொல் ஓ மதி கெட்டார்?' என்பார்;
'முன்னை ஊழ் வினையினால் முடிக்கல் ஆம்' என்பார்;
'கன்னியும் இச்சிலை காணும் ஓ?' என்பார்.

பொருள் · Meaning in Tamil

இது கொணர்க என - இந்த வில்லைக் கொண்டு வருக என்று; என் இயம்பினான் - எதற்காகச் சொன்னான் (இம் மன்னன்); என்பார் - என்று கூறுபவர்களும்; மதி கெட்டார் - (வில்லை வளைக்க விரும்பிய) இம் மன்னனைப் போல; மன்னவர் உளர்கொல் - அறிவற்ற அரசர் வேறு யாரேனும் இருக்கின்றார்களா?; என்பார் - என்று சொல்பவர்களும்; முன்னை ஊழ்வினையினால் - முற்பிறப்பில் செய்த நல்வினையால்; முடிக்கில் ஆம் என்பார் - ஒரு வேளை வளைத்தலும் கூடும் என்று கூறுபவர்களும்; கன்னியும் இச்சிலை - கன்னியான சீதையும் இந்த வில்லை; காணுமோ என்பார் - கண்டிருப்பாளோ என்று சொல்பவர்களும்.

இந்த வில்லைக் கன்னியின் திருமணத்தின் பொருட்டு வைத்த இவனைப் போல மதிகெட்ட அரசர் இருக்கமுடியாது என்பது. வளைக்கப்படாது கிடக்கும் இந்த வில்லைச் சீதை கண்டால் கலங்குவாள் என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Why did he order this to be brought?' some said;
  2. 'Is there any other king so out of his mind?' some said;
  3. 'It may be done through the good deeds of former lives,' some said;
  4. 'Has the maiden ever seen this bow?' some said.

What the poem says

Some in the crowd turn critical of King Caṉakaṉ. Why bring the bow out at all? What king but a foolish one would make his daughter's marriage depend on stringing such a thing?

Others are more hopeful: perhaps merit from past lives will let someone succeed. And some pity Cītai, wondering whether she has seen the bow, since the sight of it lying unstrung would surely dismay her.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'eṉ itu koṇarka eṉa iyampiṉāṉ?' eṉpār;
'maṉṉavar uḷarkolō mati keṭṭār?' eṉpār;
'muṉṉai ūḻ viṉaiyiṉāl muṭikkil ām' eṉpār;
'kaṉṉiyum ic cilai kāṇumō?' eṉpār.