கம்பராமாயணம் 747 · பால 12.9

Section பால காண்டம் / 12. கார்முகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'இ சிலை உதைத்த கோற்கு இலக்கம் யாது?' என்பார்;
'நச்சு இலை நங்கை மேல் நாட்டு வேந்து' என்பார்;
'நிச்சயம் எடுக்கும் கொல் நேமியான்?' என்பார்
'சிற்சிலர் விதிசெய்த தீமைதான்' என்பார்.

பொருள் · Meaning in Tamil

இச்சிலை - இந்த வில்; உதைத்த கோற்கு - (தன்னிடத்திலிருந்து) செலுத்திய அம்புக்கு; இலக்கம் யாது - குறியாக அமைவது எது; என்பார் - என்று சொல்பவர்களும்; வேந்து - சனக மன்னன்; நச்சிலை - பெருமை மிக்க இந்த வில்லை; நங்கை மேல் - நங்கையான இச் சீதையின் திறத்திற்காகவே; நாட்டும் - நிலை நிறுத்தியுள்ளான்; என்பார் - என்று கூறுபவர்களும்; நேமியான் - சக்கரப் படை ஏந்திய திருமாலாகிய இந்த இராமனும்; நிச்சயம் எடுக்கும் கொல் - உறுதியாக இந்த வில்லை எடுத்து வளைப்பானா; என்பார் - என்று கூறுபவர்களும்; சிற்சிலர் - சிலபேர்; விதி செய்த தீமை தான் - ஊழ்வினை விளைத்த தீமையே (இவ்வாறு அமைந்தது); என்பார் - என்று வருந்துபவர்களும் (ஆனார்).

வில்லைக் குறித்துக் கண்டவர் பலபடப் புனைந்து கூறுவது. உயர்வு குறிக்கும் இடைச்சொல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'What target could there be for an arrow this bow sends?' some said;
  2. 'The king has planted this dread bow over the maiden's fate,' some said;
  3. 'Will the bearer of the discus surely lift it?' some said;
  4. 'It is an evil that fate has wrought,' a few said.

What the poem says

The crowd's talk continues. Some marvel that no target could stand against an arrow from such a bow; some note that Caṉakaṉ has made it the condition of Cītai's marriage.

Others wonder whether Irāmaṉ, whom they half-recognise as Tirumāl, the bearer of the discus, will truly be able to lift it, while a few lament that fate has brought the girl to this pass.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ic cilai utaitta kōṟku ilakkam yātu?' eṉpār;
'naccu ilai naṅkaimēl nāṭṭum vēntu' eṉpār;
'niccayam eṭukkumkol nēmiyāṉ?' eṉpār
'ciṟcilar viti ceyta tīmai ām' eṉpār.