கம்பராமாயணம் 748 · பால 12.10
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மொய்த்தனர் - (அங்கே) நெருங்கிக் கூடியிருந்த மிதிலை மக்கள்; இன்னணம் மொழிய - இவ்வாறு பலபடியாகச் சொல்லிக் கொண்டிருக்க; மன்னன் முன் - (அதனைச் சுமந்து வந்த பணியாளர்) சனகன் முன்பு; உய்த்தனர் - கொண்டு வந்து; நிலம் முதுகு உளுக்கி - நிலமகளின் முதுகு (சுமை தாங்காமல்) நெளிந்து குழிந்து போகும்படி; கீழ் உற வைத்தனர் - (பூமியின் மேல்) அந்த வில்லை வைத்தார்கள்; கண்ட வேந்தர் - (அந்த வில்லை) நேரே பார்த்த அரசர் யாவரும்; வாங்குநர் யாவரோ - (இந்த வில்லை) வளைக்கப் போகின்றவர் யாரோ? (எவராலும் வளைக்கமுடியாது); எனா - என்று கூறி; கைத்தலம் விதிர்த்தனர் - (அந்த வில்லைத் தொடுவதற்கும் கூசி) கை நடுக்கம் எடுத்தனர்.
பணியாளர் அவ்வில்லை அரசன்முன் வைத்த அளவில் அதைக் கண்ட அரசர் இவ்வில்லை வளைக்க எவராலும் முடியாது எனக் கூறிக் கைநடுக்கம் எடுத்தனர் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- While the thronging people spoke this way, before the king
- they brought it, and set it down so that Earth's back buckled
- and sank beneath it; 'Who could ever bend it?' they said,
- and their hands shook, those kings who saw it.
What the poem says
The porters set the bow down before Caṉakaṉ, and its weight is so great that the ground seems to buckle under it.
The kings who have come as suitors take one look at it, declare that no one could ever bend such a thing, and find their hands trembling at the very thought of touching it.