கம்பராமாயணம் 749 · பால 12.11

Section பால காண்டம் / 12. கார்முகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1போதகம் அனையவன் பொலிவு நோக்கி, அவ்
வேதனை தருகின்ற வில்லை நோக்கித், தன்
மாதினை நோக்குவான் மனத்தை நோக்கிய,
கோதமன் காதலன், கூறல் மேயினான்.

பொருள் · Meaning in Tamil

றை யொத்தவனாகிய இராமனது; பொலிவு நோக்கி - அழகைக் கண்டு; வேதனை தருகின்ற - (அவனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்விக்க விரும்பி) துன்பம் தருகின்ற; அவ் வில்லை நோக்கி - (தனது விருப்பத்திற்கு இடையூறாக உள்ள) அந்த வில்லின் தன்மையையும் பார்த்து; தன் மாதினை நோக்குவான் - (இந்த வில் மணமுடிக்கத் தடையாக உள்ளதே; இவள் கன்னியாகவே மூப்பாளோ என்ற மனக் கவலையோடு) தன் மகளைப் பார்க்கின்ற சனகனது; மனத்தை - மனக் கலக்கத்தை; நோக்கிய - உணர்ந்த; கோதமன் காதலன் - கெளதமன் மகனாகிய சதானந்தன்; கூறல் மேயினான் - சொல்லத் தொடங்கினான்.

போதகம்: இள வயதுடைய யானைக் கன்று. வில்லின் வரலாற்றைச் சனகராசன் கூறுவதாக முதனூலில் உள்ளது. இங்கே சதானந்தன் உரைப்பதாக அமைத்துள்ளார். தன் மாதினை நோக்குவான் மனம் என்றது தன் அருமைப் பெண் கன்னியாகவே மூத்துக் கழிய நேருமோ என்ற மனக் கவலையைக் குறிக்கும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Looking at the splendour of the one who was like a young elephant, and at
  2. that bow which brought only anguish, and seeing into the mind
  3. of the king who kept gazing at his daughter,
  4. the son of Kōtamaṉ began to speak.

What the poem says

The family priest Catāṉantaṉ, son of the sage Kōtamaṉ, watches the scene. He sees Irāmaṉ's beauty, sees the bow that stands in the way, and sees Caṉakaṉ glancing anxiously at his daughter, afraid she may grow old unmarried because no one can string it.

Reading the king's mind, Catāṉantaṉ begins to tell the bow's history. In Vālmīki's original it is Caṉakaṉ himself who tells this story; Kampaṉ gives it to the priest.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pōtakam aṉaiyavaṉ polivai nōkkit, av
vētaṉai tarukiṉṟa villai nōkki, taṉ
mātiṉai nōkkuvāṉ taṉ maṉattai nōkkiya,
kōtamaṉ kātalaṉ, kūṟal mēyiṉāṉ.