கம்பராமாயணம் 7450 · யுத்த 15.137
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஐய - ஐயனே; அயோத்தி வேந்தற்கு - அயோத்திக்கு வேந்தன் ஆகிய இராமனுக்கு; அடைக்கலம் ஆகி - அடைக்கலப் பொருள் ஆகி, நீ ஆங்கே - நீ அங்கு; உய்கிலை என்னின் -உயிர் உய்ந்து வாழாய் ஆயின்; மற்று இவ் அரக்கராய் உள்ளோர் எல்லாம் - இந்த அரக்கர்களாய் உள்ள நாங்கள் எல்லாம்; எய்கணை மாரியாலே - இராமன் எய்யும் அம்பு மழையாலே; முழுதும் இறந்து பாழ்பட்டால் - முற்றிலும் இறந்து பாழாகிப் போனால்; கையினால் எள்நீர் நல்கி - கையினால் எள்ளொடு கூடிய நீரை இறந்தவர் பொருட்டுக் கொடுத்து; கடன் கழிப்பாரைக் காட்டாய் - நீர்க் கடன் நிறைவேற்றுவர் யாவர் உளர் எனக் காட்டாய் என்றவாறு.
நீ இராமனுடன் இருந்து எங்கட்கு நீர்க்கடன் செய்க என்றவாறு. நீ இராமனிடம் இருப்பது எங்களுக்கும் நன்மையென்று கும்பகருணன் கூறுகிறான். இறந்தார்க்கு நீர்க்கடன் செய்தல் மிகமிக இன்றியமையாதது என்ற குறிப்பும் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Sir, if you do not take refuge with the king of Ayōttī
- and live on there, then when all of us who are demons
- have died under his rain of arrows and are utterly laid waste,
- show me who will offer sesame and water with his hands and perform our rites.”
What the poem says
Kumpakaruṇaṉ gives Vīṭaṇaṉ another reason to stay with Irāmaṉ. When the whole demon race has been destroyed by Irāmaṉ's arrows, someone must be left alive to offer the water mixed with sesame that is due to the dead. If Vīṭaṇaṉ dies with them, there will be no one to perform those funeral rites. So his staying with Irāmaṉ is good for the demons too.