கம்பராமாயணம் 7451 · யுத்த 15.138
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இலங்கை மூதூர் வருவதும் -நீ இலங்கை மூதூர்க்கு(வரத்தக்க காலம் இப்போது அன்று வரும் காலம்; புலை எலாம் மாண்ட பின்னை- இழிதொழில் உடைய அரக்கர் கூட்டம் எல்லாம் அழிந்தபிறகு, திருவுறை மார்பனோடும் புகுந்து - திருமகள் வாழும் மார்பினை உடைய இராமனோடு புகுந்து; பின் என்றும் தீராப்- பிறகு என்றும் அழியாத; பொருவ அருஞ்செல்வம் - ஒப்பற்ற இலங்கையரசச் செல்வத்தையும் மற்றும் வீட்டு உலகச் செல்வத்தையும்; துய்க்கப் போதுதி விரைவின் - அனுபவிப்பதற்காக விரைவில் திரும்பிப் போய்விடுக; என்றான் - என்று கும்பகருணன் கூறினான்; கருமம் உண்டு உரைப்பது என்றான் - (அதற்கு வீடணன் உன்னிடம் சொல்லவேண்டிய காரியம் ஒன்று உள்ளது என்றான்; உரை என - அதைச் சொல் என்று கும்பகருணன் கேட்க; கழறலுற்றான் - வீடணன் கூறத் தொடங்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Your coming to the ancient city of Ilaṅkai should be after all its vileness is dead,
- together with Him on whose chest Fortune dwells; enter then, and ever after
- enjoy its unfailing, matchless wealth; go back quickly,” he said.
- “There is something I must say,” said Vīṭaṇaṉ. “Say it,” he replied, and Vīṭaṇaṉ began.
What the poem says
Kumpakaruṇaṉ urges Vīṭaṇaṉ to return to Irāmaṉ at once. The right time for him to enter Ilaṅkai is after its wicked demons have all perished. Then he can come with Irāmaṉ, on whose chest the goddess of fortune lives, and enjoy the kingdom and lasting bliss.
Vīṭaṇaṉ replies that he has something to say, and Kumpakaruṇaṉ tells him to say it.