கம்பராமாயணம் 7452 · யுத்த 15.139

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘இருள் உறு சிந்தையேற்கும்இன் அருள் சுரந்த வீரன்
அருளும், நீ சேரின்; ஒன்றோ,அவயவமும் அளிக்கும்; அன்றி,
மருள் உறு பிறவி நோய்க்குமருந்தும் ஆம்; மாறிச் செல்லும்
உருளுறு சகட வாழ்க்கைஒழித்து, வீடு அளிக்கும் அன்றே.

பொருள் · Meaning in Tamil

இருள் உறு சிந்தையேற்கும் - அறியாமை நிரம்பிய மனத்தையுடையவனான எனக்கும்; இன் அருள் சுரந்த வீரன் - இனிய அருளைச் சுரந்து அடைக்கலம் தந்த வீரனாகிய இராமன்; நீ சேரின் அருளும் - நீ அடைக்கலமாக வந்து சேரினும் அருள் புரிவான்; ஒன்றோ -அது மட்டுமா?, அவயமும் அளிக்கும் -உனக்கு எவராலும் துன்பம் நேராமல் அபயக் கருணையும் செய்வான்; அன்றி - அதோடு; மருள் உறு பிறவி நோய்க்கு - மயக்கம் தருகிற பிறவிப் பிணிக்கு; மருந்தும் ஆம் - மருந்தும் ஆவான்; மாறிச் செல்லும் - இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் தன்மையுடைய; உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து - உருண்டு வரும் வண்டிச் சக்கரம் போன்ற இந்த உலக வாழ்வை நீக்கி; வீடு அளிக்கும் அன்றே - வீட்டுலகை அளிப்பான் அன்றோ?.

வீடணன் கும்பகருணனை அழைப்பதே கும்பகருணன் வினாவையத்துக்கு விடையாய் நின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “The hero who poured sweet grace even on me, dark of mind as I was,
  2. will show you grace if you join him; and not only that, he will grant you refuge; more,
  3. he is the medicine for the bewildering disease of birth; ending
  4. this life that turns like a rolling cart-wheel, he will grant release.”

What the poem says

Vīṭaṇaṉ explains why he has come. Irāmaṉ showed kindness even to him, ignorant as he was, and he will surely do the same for Kumpakaruṇaṉ. He will give him protection and cure the sickness of being born again and again. He will end the turning wheel of joy and sorrow and grant final liberation.

Vīṭaṇaṉ's invitation answers Kumpakaruṇaṉ's question about why he has come.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘iruḷ uṟu cintaiyēṟkum iṉ aruḷ curanta vīraṉ
aruḷum, nī cēriṉ; oṉṟō, avayamum aḷikkum; aṉṟi,
maruḷ uṟu piṟavi nōykku maruntum ām; māṟic cellum
uruḷuṟu cakaṭa vāḻkkai oḻittu, vīṭu aḷikkum aṉṟē.