கம்பராமாயணம் 7453 · யுத்த 15.140
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உத்தம! - உத்தமனே; எனக்கு அவன் தந்த - எனக்கு அந்த இராமன் கொடுத்த, செல்வத்து இலங்கையும் - செல்வத்தையுடைய இலங்கையையும்; அரசும் - அதனை ஆளும் உரிமையினையும்; எல்லாம் நினக்கு நான் தருவென் - பிற எல்லாவற்றையும் உனக்கு நான் கொடுப்பேன்; தந்து - அவ்வாறு கொடுத்து; உன் ஏவலின் நெடிது நிற்பென் - உன் ஏவலின் வழியே என்றும் நடப்பேன்; உனக்கு இதின் உறுதி இல்லை - உனக்கு இதைக் காட்டிலும் உறுதி தருவது வேறு ஒன்றும் இல்லை; உன் பின் வந்தேன் - உன் பின் பிறந்தோனாகிய எனது; மனக்கு நோய் துடைத்து - மனத்தில் உள்ள வருத்தத்தைப் போக்கி; வந்த மரபையும் விளக்கு - பிறந்த குலமரபையும் விளங்கச் செய்வாய்.
வாழி-அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Rich Ilaṅkai and its kingship and everything he gave me
- I will give to you; and having given them, I will stand long at your command;
- nothing could be better for you than this. Noble one, I who was born after you—
- wipe away the grief of my heart, and bring glory to the line we come from.”
What the poem says
Vīṭaṇaṉ makes a generous offer. Irāmaṉ has given him the throne of Ilaṅkai and all its wealth. He will hand all of it to Kumpakaruṇaṉ and serve him for the rest of his life.
He asks his elder brother to ease the grief of the younger and to bring honour back to the family name.