கம்பராமாயணம் 7454 · யுத்த 15.141
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஐய! - ஐயனே; நீதி அறத்தொடும் தழுவி நின்றாய் - நீதியையும் அறத்தையும் பற்றி நிற்பவனே!; போதலோ அரிது - போரில் உயிர் தப்பிப் போதல் மிக அரிதாகும்; போனால் புகலிடம் இல்லை - அவ்வாறு தப்பிப் போனாலும் புகலாக அடைவதற்கு உரிய வேறு இடமும் இல்லை; வல்லே சாதலோ சரதம் - விரைவாகச் சாவதோ உறுதி; ஆதலால் - ஆதலால்; உளதாம் ஆவி - உள்ள உயிரினை; அநாயமே உகுத்து என் - வீணாகப் போக்கி என்ன பயன்?; வேத நூல் மரபுக்கு ஏற்ற - வேதநூல்களில் கூறிய முறைமைக்குத் தக்க; ஒழுக்கமே பிடிக்கவேண்டும் - நல்லொழுக்கத்தையே உறுதியாகக் கடைப்பிடிக்கவேண்டும்.
பற்று விட்டுப் பற்றற்றான் பற்றினைப் பற்றுக என்றான். கும்பகருணனின் அற நெஞ்சுணர்ந்து கூறி அவனை இராமன் பக்கம் சேர்க என்கிறான் வீடணன். வல்லே- விரைவாக. அநாயம்-வீண்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “To escape is hard; and if you escape, there is no refuge; soon
- death is certain. You have held fast to justice and righteousness;
- so why throw away the life you have for nothing, sir?
- One must hold to the conduct that fits the way of the Vedas.”
What the poem says
Vīṭaṇaṉ argues practically. Kumpakaruṇaṉ is unlikely to survive the battle. If he does, he will have nowhere to shelter, and death will come soon anyway. He has always stood by justice and righteousness, so why waste his life for nothing? He should follow the conduct the scriptures teach.
In effect Vīṭaṇaṉ is telling his brother to let go of worldly attachment and hold on to the One who is free of all attachment.