கம்பராமாயணம் 7456 · யுத்த 15.143

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
“

பொருள் · Meaning in Tamil

துணிவு பூண்டோர் - உறுதியான துறவு எண்ண வலிமை உள்ளவர்கள்; மக்களை - பெற்ற மக்களையும்; குரவர் தம்மை - இருமுது குரவரையும்; மாதரை - மனைவியரையும்; மற்றுளோரை - மற்றுமுள்ள உறவினர்களையும்; இன் உயிர் ஒக்கும் அன்னாரை - இனிய உயிரை ஒத்த நண்பர்களையும்; உதவி செய்தாரோடு - உதவி செய்தவர்களையும் ஒன்ற - முழுமையாக; இத்தொடர்ச்சி துக்கம் என்று - இந்த உலகியல் பந்தத் தொடர்ச்சி துன்பம் விளைவிக்கும் என்று எண்ணித்; துறப்பாரால் - துறந்து விடுவார்கள்; மிக்கது - சிறந்ததாகிய அத்துறவு; நலனே ஆக -நற்செயலாக ஆகி, வீடு பேறு அளிக்கும் அன்றே - வீட்டுலகத்தைத் தருமல்லவா?

தவறு செய்த தமையனைத் துறத்தலும் அறமே என்பதையும் இங்கு வீடணன் கூறுகிறான். துறவிகளின் ஒழுக்கம் அறத்தைக் கைவிடாதது என்று கூறி இல்லறத்தவனாகிய நீயும் அவ்வற வழி நிற்க என்றவாறு காண்க, தொடர்ச்சி-பந்தம். நலன்-அறம், ஆல்-அசை

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Children, elders, wives and all the rest,
  2. those dear as one's own sweet life, together with those who have helped one—
  3. ‘this bond is sorrow,’ say the resolute, and they renounce them all;
  4. and that renunciation, being the highest good, grants release, does it not?”

What the poem says

Vīṭaṇaṉ points to the example of those who renounce the world. People of firm resolve give up children, parents, wives, other relatives, friends as dear as life, and even those who have helped them, because they see these ties as a source of sorrow. That renunciation leads to liberation.

His point is that leaving an elder brother who has done wrong is also right.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘makkaḷai, kuravartammai mātarai, maṟṟuḷōrai
okkum iṉ uyir aṉṉārai, utavi ceytārōṭu oṉṟa,
“tukkam, it toṭarcci “ eṉṟu, tuṟapparāl tuṇivu pūṇṭōr;
mikkatu nalaṉē āki, vīṭupēṟu aḷikkum aṉṟē!