கம்பராமாயணம் 7457 · யுத்த 15.144

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஐய! - ஐயனே: தீவினை ஒருவன் செய்ய -தீய செயலை ஒருவன் செய்ய, அவனொடும் தீங்கு இலாதோர் - அதற்காக அவனொடு தீமை செய்யாதவர்களும்; வீவினை உறுதல் - உயிர் விடுதலை அடைதல்; மேன்மையோ- மேன்மை விளைவிப்பதா?, கீழ்மை தானோ- தாழ்வினை விளைவிப்பதா?; ஆய்வினை உடையை அன்றே - நீ ஆய்வு செய்யும் திறமை படைத்துள்ளாய் அல்லவா? அறத்தினை நோக்கி - அறத்துக்காகப் பார்த்து; ஈன்ற தாய்- தன்னைப் பெற்ற தாய், வினை செய்ய அன்றோ - தீய செயலைச் செய்ததனாலன்றோ; தவத்தின் மிக்கான் கொன்றனன் - தவத்தில் மிகுந்த பரசுராமன் அத்தாயையே கொன்றான் என்ற வாறு.

ஒருவன் செய்த தீயசெயலுக்குத் தீங்கு செய்யாதவரும் அழிதல் என்ன நியாயம் என வினவியவாறு. இப்பகுதியில் வீடணன் தனி மனித அறம் பேசுகிறான். அரசியல் அறம் பேசவில்லை. மன்னன் தவறே செய்யான் என்ற எண்ணம் நிலைபெற்றிருந்த காலத்தில் தவறு செய்தவன் பெருமன்னன் ஆயினும் அவனை விட்டு விலகுக என்று வீடணன் வாயிலாக விளக்கப்படுகிறது. தவறு செய்தவர் தண்டனை பெற்றே தீரவேண்டும். அவ்வாறு தண்டிப்பதும் அறமே எனத் தாயைக் கொன்ற பரசுராமன் கதை வழி வீடணன் விளக்குகிறான். சமதக்கினி முனியின் மனைவியாகிய ரேணுகை கங்கையில் நீராடிப் புனல் கொண்டு வரப் போன போது, சித்திரரதன் என்ற கந்தருவன் தன் துணைவியரோடு புனலாடுவது கண்டு மனம் நெகிழ்ந்து காலம் தாழ்த்தித் தன் கணவனது ஓமத்துக்கு நீர் கொண்டு வந்தாள். நடந்ததை அறிந்த முனிவன் தன் மக்களான உருமன்வான், சுசேணன், விசு, விசுவாவசு ஆகியோரை அழைத்து அவளை மனத்தில் கவலையில்லாமல் கொல்லுமாறு சொன்னான். அவர்கள் தயங்கிப் பின் வாங்கியபோது கடைசி மகனாகிய பரசுராமன் தாயைக் கொன்று தந்தையின் கட்டளையை நிறைவேற்றினான் என்பது கதை. வீவினை உறுதல்-இறத்தல், ஆய்வினை- ஆராய்ச்சி செய்யும் திறமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “When one man does evil, for those who did no wrong to perish with him—
  2. is that noble, sir, or is it base?
  3. You have the power to weigh such things, have you not? Looking to righteousness,
  4. did not that great ascetic kill even the mother who bore him, when she did wrong?”

What the poem says

Vīṭaṇaṉ asks whether it is noble or base for innocent people to die alongside one man who has done evil. Kumpakaruṇaṉ can judge that for himself. Wrongdoing must be punished, whoever commits it.

He recalls Paracurāmaṉ. The sage Camatakkiṉi's wife Rēṇukai was delayed at the river after she lingered watching a gandharva at play. The sage ordered his sons to kill her. The elder sons hesitated, but the youngest, Paracurāmaṉ, carried out his father's command. Vīṭaṇaṉ is speaking of personal ethics: one should leave a wrongdoer even if he is a great king.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘tīviṉai oruvaṉ ceyya, avaṉoṭum tīṅku ilātōr
vīviṉai uṟutal, aiya, mēṉmaiyō kīḻmaitāṉō?
āy viṉai uṭaiyai aṉṟē? aṟattiṉai nōkki īṉṟa
tāy viṉai ceyya aṉṟō, koṉṟaṉaṉ, tavattiṉ mikkāṉ?