கம்பராமாயணம் 7459 · யுத்த 15.146

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மடலுடை அலங்கல் மார்ப! - இதழ்களையுடைய மலர்களால் ஆன மார்பை உடையவனே!; உடலிடைத் தோன்றிற்று ஒன்றை - உடலில் தோன்றிய ஒரு கழற்புண்ணை: அறுத்து - கத்தியால் அறுத்து; அதன் உதிரம் ஊற்றி - அதில் உள்ள தீய உதிரத்தையும் சீழ் நீரையும் வெளியேற்றி; சுடல் உறச் சுட்டு - கார மருந்துகளை அல்லது தீச்சுடலைப் பொருத்தமாக வைத்துச் சுட்டு; வேறு ஓர் மருந்தினால் - புண்ணை ஆற்றுவதற்குரிய வேறு ஒரு மருந்தினால்; துயரம் தீர்வர்- உலகத்தவர் துயரம் நீங்குவார்கள்; மதி உடையவர்க்கு மன்னோ - அறிவுடையவர்களுக்கு; கடலிடைக் கோட்டம் தேய்த்துக் கழிவது- கடலின் கண் நறுமணப் பொருள்களைத் தேய்த்துக் கழிய விடுவது; கருமம் அன்றால் - செயத்தகு செயலாகாது.

கடலில் கோட்டம் தேய்க்கும் செயல் கடல் நீரின் தன்மையை எவ்வகையிலும் மாற்றாதது போல அரக்கராகிய பாவக் கடலில் அறவழிப்பட்ட உன் உயிராகிய கோட்டத்தைக் கரைப்பது பயனற்ற செயல் என்று கூறுகிறான் வீடணன். இப்பாடலில் உடலில் தோன்றிய கட்டியாக இராவணனைக் கருதிப் பேசுதல் காண்க.

கோட்டம்-ஒரு வகை நறுமணம் பொருள். 'கடலிற் பெருங்காயம் கரைத்தாற் போல' என்னும் உலக வழக்கும் உணர்க. கோட்டம்-பெருங்காயம் என்பாரும் உளர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “When a growth appears on the body, men cut it out, drain its blood,
  2. burn it with cautery, and with some other medicine end their pain;
  3. to rub away fragrant kōṭṭam into the sea and let it go to waste is no fit deed
  4. for those who have sense, O you whose chest wears a garland of petals!”

What the poem says

Vīṭaṇaṉ uses two images. When a tumour grows on the body, people cut it out, drain it, cauterise it and heal the wound. Irāvaṇaṉ is that growth on the family, and it is right to cut him off.

Rubbing a precious fragrant substance into the sea changes nothing about the sea and wastes the fragrance. In the same way, Kumpakaruṇaṉ's righteous life will be wasted if he dissolves it in the sea of the demons' sin. There is a similar proverb about dissolving asafoetida in the ocean.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘uṭaliṭait tōṉṟiṟṟu oṉṟai aṟuttu, ataṉ utiram ūṟṟi,
cuṭal uṟac cuṭṭu, vēṟu ōr maruntiṉāl tuyaram tīrvar;
kaṭaliṭaik kōṭṭam tēyttuk kaḻivatu karumam aṉṟāl,
maṭaluṭai alaṅkal mārpa! mati uṭaiyavarkku maṉṉō.