கம்பராமாயணம் 7463 · யுத்த 15.150

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘தேவர்க்கும் தேவன் நல்க;இலங்கையின் செல்வம் பெற்றால்,
ஏவர்க்கும் சிறியை அல்லை!யார், உனை நலியும் ஈட்டார்?
மூவர்க்கும் தலைவர் ஆனமூர்த்தியார், அறத்தை முற்றும்
காவற்குப் புரிந்து நின்றார்,காகுத்த வேடம் காட்டி.

பொருள் · Meaning in Tamil

மூவர்க்கும் தலைவர் ஆன மூர்த்தியார் - அரி அரன் அயன் என்னும் மூவர்க்கும் தலைவரான பரம்பொருள்; அறத்தை முற்றும் காவற்கு - அறத்தை முழுதும் காக்கும் பொருட்டுக்; காகுத்த வேடம் காட்டி புகுந்து நின்றார் - காகுத்த வேடங்கொண்டு நில உலகில் புகுந்துள்ளார்; தேவர்க்கும் தேவன் நல்க - அத்தகைய தேவர்க்குத் தேவன் ஆயை இராமன் தந்தருள; இலங்கையில் செல்வம் பெற்றால் - இலங்கையை ஆளும் செல்வத்தைப் பெற்றால்; ஏவர்க்கும் சிறியை அல்லை -எவருக்கும் சிறுமையுடையவன் ஆகாய்; உனை யார் நலியும் ஈட்டார்- உன்னை எதிர்த்து வருத்தக் கூடியவர் யாவர்?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “If the God of gods bestows it and you win the wealth of Ilaṅkai,
  2. you will be lesser than no one! Who could ever harm you?
  3. The Supreme Being, lord of all three gods, has come
  4. to guard righteousness entire, showing himself in the guise of a Kakuttha prince.”

What the poem says

Vīṭaṇaṉ tells Kumpakaruṇaṉ who Irāmaṉ really is. He is the Supreme Being, above the three gods Viṣṇu, Civaṉ and Piramaṉ, and he has come to earth as a prince of the Kakuttha line to protect righteousness.

If this God of gods gives Kumpakaruṇaṉ the kingdom of Ilaṅkai, no one will be his superior and no one will be able to harm him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘tēvarkkum tēvaṉ nalka; ilaṅkaiyil celvam peṟṟāl,
ēvarkkum ciṟiyai allai! yār, uṉai naliyum īṭṭār?
mūvarkkum talaivar āṉa mūrttiyār, aṟattai muṟṟum
kāvaṟkup pukuntu niṉṟār, kākutta vēṭam kāṭṭi.